சென்னை : மார்ச் 16, 2024
தற்போது ஆளும் ஒன்றிய அரசின் பிரதான கோஷமாக ஒரே நாடு : ஒரே தேர்தல் என்று முரணாக பேசிவரும் நிலையில் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுவும் நடைபெறவிருக்கும் தேர்தல் யூனியன் பிரேதேசங்கள் உட்பட மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் கிண்டல் தொணியில் வெளியிட்டுள்ளார்.
“Before we try to attempt “One Nation, One Election” can we at least try “One Election – One Phase”? – Thiru. KamalHaasan, President – Makkal Needhi Maiam
ஒரே நாடு : ஒரே தேர்தல் எனும் முழக்கத்தை எழுப்பும் ஆளும் ஒன்றிய அரசு அதன் முன்னோட்டமாக ஏன் நாடு முழுதும் ஒரே கட்டத்தில் தேர்தலை நடத்திட முயற்சிக்கக்கூடாது எனும் பொருள்பட ட்வீட் செய்துள்ளது பலரையும் ஆச்சரியம் கொள்ள வைத்துள்ளது என்றால் மிகையாகாது.
அதிலும் குறிப்பாக ட்வீட்டில் இணைத்துள்ள ஹாஷ்டாக் தனிச்சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
#DemocracyMatters #LokSabhaElection2024 #OneNationOneElection