அருப்புக்கோட்டை : நவம்பர் 26, 2024
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழா தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டம்தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அதன்படி இன்று அருப்புக்கோட்டையில் கட்சிக் கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை கட்சியின் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக முன்னின்று நடத்தினார்கள்.
அருப்புக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மநீம கட்சியினர்…
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அருப்புக்கோட்டை பாலவனத்தம் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் கட்சிக் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்கு கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் திரு. T.செல்வகுமார் தலைமை வகித்தார். நகரச் செயலர் திரு. J.ராஜாமணி, ஒன்றியச் செயலாளர் திரு. M.கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் கட்சிக் கொடியேற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P.பன்னீர்செல்வம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், நற்பணி அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு.P.I.முஹமது சித்திக், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு.J.சத்தியநாராயணன், கோயம்புத்தூர் தெற்கு மாநகரச் செயலாளர் திரு. A. சிராஜுதீன், அருப்புக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு.M.பாஸ்கரன், திருச்சுழி மாவட்டப் பொறுப்பாளர் திரு. S.சரவணக்குமார், சாத்தூர் நகரச் செயலாளர் திரு.C.கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அருப்புக்கோட்டை மாவட்ட துணைச் செயலாளர் திரு. C.பாஸ்கரபாண்டியன், நற்பணி அணி நகர அமைப்பாளர் திரு. J.சந்திரசேகர், நற்பணி அணி ஒன்றிய அமைப்பாளர் திரு.K. அழகு சுந்தரம், தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் திரு.N.நாகராஜன், வட்டச் செயலாளர்கள் திரு.T.சந்திரன், திரு. P.ரங்கராஜன், ஊராட்சி செயலாளர்கள் திரு. G.சக்திவேல், திரு. T.வேலுச்சாமி, திரு. P.சுப்புராஜ், திரு. R.கண்ணன், கிளைச் செயலாளர்கள் திரு. M.முத்துக்கருப்பன், திரு. K.பாண்டியராஜ், திரு. G.அடைக்கலம் மற்றும் நிர்வாகிகள் திரு. M.முருகேசன், திரு. S.மனோகரன், திரு. R.ஆறுமுகம், திரு. V.விநாயகமூர்த்தி, திரு. R.சுப்புராம், திரு. M.காளியப்பன், திரு. S.கிருஷ்ணன், திரு. K.முத்துக்கருப்பன், திரு. B.சரவணக்குமார், திரு. S.பாலகிருஷ்ணன், திரு. B.வினோத்குமார், திரு. B.கணேஷ்குமார், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விருதுநகர் லதா பிரின்ட்ஸ் உரிமையாளர் திரு. L.முனியராஜ் திரளாகப் பங்கேற்றனர்.
நன்றி : மக்கள் நீதி மய்யம்