விருதுநகர் : டிசம்பர் 09, 2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் மாதம் 7 இல் தமிழகம் முழுக்க இரத்ததானம், உடலுறுப்பு தானம், அன்னதானம், மாணவர்களுக்கு மற்றும் எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் மேற்கண்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகரில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏற்பாட்டில் பல் சிகிச்சைக்காக பரிசோதனை முகம் மற்றும் இரத்ததானம் முகாம் ஆகியவைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக விருதுநகரில் இரத்த தான முகாம்…

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்ட மநீம சார்பில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, சுரேஷ் மஹாலில் 8வது ஆண்டு இரத்த தானம் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் திரு. J.காளிதாஸ், நகரச் செயலாளர் திரு. M.கமல் கண்ணன் தலைமையில், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. நடராஜன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. நெல்சன் தாஸ், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் திரு. பன்னீர் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P.பன்னீர்செல்வம், சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. R.லஷ்மன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. P.S.சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. R.ஜெகன், திரு. பஜார் T.பிரசாத், திரு. சுப்பிரமணியன், திரு. ஸ்ரீதர், சமூக ஊடக அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. மூர்த்தி சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல் பரிசோதனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இரத்த தானம் அளித்தவர்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.மக்கள் நீதி மய்யம்

விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் பற்றிய செய்திகள் அச்சு ஊடகத்தில் வெளியாகியுள்ளது.

#KamalHaasan #MakkalNeedhiMaiam

நன்றி : மக்கள் நீதி மய்யம்