கோவை : டிசம்பர் 03, 2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் ஏழாம் தேதியன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அன்னதானம், இரத்ததானம், உடல் உறுப்பு தானம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் நடத்தி வருகிறார்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு இனிப்பு, இரவு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

“முதியோர் இல்லத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மநீம கட்சியினர்… மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை புலியகுளத்தில் உள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் இனிப்பு, இரவு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திரு.பிரபு, மாநகரச் செயலாளர் திரு.மணிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர்கள் திரு.ஜெயசுதன், திரு.விக்டர் டேவிட், திரு.ஜெய்கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில், நற்பணி இயக்க மண்டல அமைப்பாளர் திரு.P.I.சித்திக், ம.நீ.ம மாவட்ட துணைச் செயலாளர் திரு.சத்தியநாராயணன், மாநகரச் செயலாளர் திரு.சிராஜுதீன், மாநகரப் பொருளாளர் திரு.சிவசண்முகம், நற்பணி இயக்க நிர்வாகிகள் திரு.மோகன், திரு.கலாநிதி, மகளிரணி நிர்வாகி திருமதி.உமாமகேஸ்வரி, இளைஞரணி நிர்வாகி திரு.கார்த்தி, திரு.ஆனந்தராஜ், புலியகுளம் திரு.ஆனந்த், திரு.சுரேன், திரு.ராஜ்கமல், திரு.ரவி, திரு.நாகராஜ், திரு.சின்னதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam

நன்றி : மக்கள் நீதி மய்யம்