ஜனவரி : 20, 2025
நிலவில் கால் பதித்ததும், விண்வெளியில் உள்ள கோள்களை விண்கலம் செலுத்தி ஆய்வு செய்வதும், இழந்த சில உறுப்புகளை செயற்கையாக உருவாக்கி மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் ஏராளமான ஆச்சரியம் தரும் அளவிலான வளர்ச்சி விண்ணை நோக்கி உயர்ந்து வருகிற காலமிது. ரோபோக்கள் மூலமாக அறுவை சிகிச்சை செய்வது முதல் சேவை செய்வது வரை அறிவியலில், தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் வந்து விட்டது.
சென்னை (அப்போதைய மெட்ராஸ்) தரமணியில் அமைந்துள்ள ஐஐடி அறிவியல் தொழில்நுட்ப கழகம் 66 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை தரமணியில் அமையபெற்ற சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்தியாவில் உள்ள தலைசிறந்த தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்ட கல்விக்கூடங்களில் ஒன்று. இந்திய நாடாளுமன்ற குழுவின் ஆணையால் நாட்டில் நிறுவப்பட்ட கல்விக்கூடங்களில் இன்றியமையாதது எனவும் சிறப்புப் பெயர் பெற்றது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கல்வி கூடம் இயக்குனராக திரு.காமகோடி நியமனம் செய்யப்பட்டார். சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நிலையில் சென்னை மயிலாப்பூரில் மாட்டுப்பொங்கல் பண்டிகையின் போது கோசாலையில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றிய போது பசு மாட்டின் சிறுநீர் அருந்துவதால் மனிதர்களில் உடலில் உள்ள ஜுரம் மற்றும் வயிற்றில் இருக்கும் செரிமானப் பிரச்சினைகள் ஆகியவை சரியாகும் என ஓர் சந்நியாசி சொன்னதாக குறிப்பிட்டார். இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் காமகோடி அவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் MS பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்னமும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாமல் இருக்கும் மாட்டின் சிறுநீர் மருந்தாக அல்லது நிவாரணியாக பயன்படும் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் மாணவர்களின் மத்தியில் மூட நம்பிக்கையை விதைத்துள்ளதாக ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பெரும்பாலோனோர் இக்கருத்திற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பலவும் சாத்தியம் என முழு நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர். மருத்துவத்தில் பல வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு முழு முனைப்புடன் நோய்ப் பிணிகளை சரி செய்து வருகிறார்கள். தொழில்நுட்பமும் பல பரிமாணங்களை எட்டியுள்ளது. திரு.காமகோடி அவர்களின் கருத்து நிச்சயம் ஏற்புடையது அல்ல என்பதும் மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனைகள் தோற்றுவிக்கக்கூடும் என்பதில் சந்தேகமே இல்லை. முரணான இக்கருத்திற்கு மாநில மாணவரணி செயலாளர் திரு.ராகேஷ் ராஜசேகரன் அவர்கள் பசு மாட்டின் சிறுநீரான கோமியம் அருந்துவதால் உண்டாகும் தீமை குறித்தும் மாடுகளுக்கு ஏற்படும் பல நோய்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் நிறைய இருக்கையில் இப்படி பொறுப்பற்ற முறையில் முரண்பாடுள்ள கருத்தை முழுமையாக மறுத்து தெளிவான அறிக்கை ஒன்றை பொதுமக்களிடையே சமர்ப்பித்துள்ளார்.
https://twitter.com/rakeshshamsher/status/1881246540221817172
https://twitter.com/imayilvagan/status/1881255212201169056
#KamalHaasan #Centrism #IITMadras #Kamakoti #Science #Technology #PongalFestival