நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த திரு எட்வின் அவர்களை ஜூம் காணொளி அழைப்பின் வாயிலாக தொடர்பு கொண்டு அவர் செய்து வரும் நற்பணிகள் மற்றும் பிரதிபலன் பாரா இலவச சேவைகளை தன்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

திரு. எட்வின் அவர்கள், 50 நாட்களைக் கடந்து அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வாகனம்/பேருந்து மூலம் சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்வது, அட்டெண்டர்களுக்கு சேர்த்து உணவுக்கு ஏற்பாடு, ஆதரவற்றவர்களுக்கு இறுதிக் காரியங்கள் என கொரோனா நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்நிலையில், நம்மவர் தலைவர் அவர்கள் எட்வின் அவர்களை தொடர்பு கொண்டு செய்து வரும் சிறப்பான பணி தகுந்த பாதுகாப்புடன் மேலும் தொடர ஊக்கமளித்தார்.