அம்பத்தூர் டிசம்பர் 02

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் 82 ஆவது வார்டு ஞானமூர்த்தி நகர் தவசி தெரு வீடுகளின் சுற்றுப்புறங்களில் சூழ்ந்து இருந்த மழை பெய்த வெள்ள நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கியது. இதனை அப்பகுதியை சேர்ந்த நமது மய்யம் அன்பர் திரு. விஜயகுமார் என்பவர் அப்பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம், வட்டச் செயலாளர் திரு பாலா என்பவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இது தொடர்பாக செயலில் இறங்கிய பாலா அவர்கள் உடனடியாக கழிவு இறைத்து அகற்றும் மோட்டர் பம்ப் ஒன்றினை அங்கே இயக்கவைத்து உடனடியாக அங்கு சூழ்ந்திருந்த கழிவு நீரை அகற்றி அவ்விடத்தை தூய்மை செய்தார்.