தற்போது நிலவி வரும் கொரொனோ தொற்று தொடர்ந்து அச்சத்தை தந்துள்ளது, மேலும் அதன் புதிய வகையான ஒமிக்ரான் எனும் உருமாறிய வைரஸ்கள் தாக்கம் தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த இந்தியர்கள் சிலருக்கு தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அதை சற்றும் உணராவண்ணம் டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2 ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மதுக்கடைகளை விற்பனைக்கு திறந்து வைக்கும் நேரத்தினை இரண்டு மணி நேரம் கூடுதலாக நீட்டித்து உள்ளது, அதாவது இதுவரை தமிழகத்தில் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது, இந்த முடிவின்படி விற்பனை நேரம் இரவு 10 மணி வரை நீட்டித்து இருப்பது அதிர்ச்சியையும் பொறுப்பின்மையையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நேரம் மாற்றத்தை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி உயர்திரு பார்த்திபன் அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்ததில் அவர் இந்த அறிவிப்பு பற்றி தமிழ்நாடு அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் இன்னும் ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கினை மறு விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.

டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும்