சென்னை டிசம்பர் 16, 2021

பெண்களின் திருமண வயதை ” 21ஆக ” உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும்.

நல்லது செய்தால் மக்கள் நீதி மய்யம் பாராட்ட தயங்கியது இல்லை.

https://indianexpress.com/article/india/cabinet-clears-push-to-raise-marriage-age-of-women-from-18-to-21-7675201/

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனை சட்டமாக இயற்றும் மத்திய அரசின் முடிவை வரவேற்று பேசிய ம.நீ.ம தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கூறியதாவது :

“மத்திய அரசின் இந்த முடிவு கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதை தடுப்பதோடு பெண்களின் முன்னேற்றத்திற்கு பேருதவியாய் அமையும்” எனவும், “இந்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும்” எனவும் வலியுறுத்தி உள்ளார்.