முதற்கட்ட வேட்பாளர்களை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் கோவை மாநகராட்சியின் முதற்கட்டமாக 47 வேட்பாளர்களை வெளியிட்டார்.
மேலும் அவர், நமது வேட்பாளர்களால் உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்படும் ஒரு முன்மாதிரி மாடலாக இந்தியா முழுக்க பேசப்படும் காலம் அருகில் வந்து விட்டது எனவும் அடுத்தடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும், தேர்தல் களத்தில் வாகை சூட வேட்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.