புகாரளிக்க காவல் நிலையம் வரும் அனைத்து மக்களுக்கும் மரியாதையும், நீதியும் கிடைக்கச் செய்ய புதிய காவல் ஆணையம் வழிவகுக்க வேண்டும்.

நெருக்கடியான பணிச்சூழலிலும், மனஅழுத்தத்திலும் தவிக்கும் காவலர்களில் குறைகளைக்களைய வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை. காவல் ஆணையங்கள் பல அமைக்கப்பட்ட போதும், புகார் அளிக்க காவல் நிலையங்கள் வரும் பல பொது மக்களில் பெரும்பாலானோருக்கு மரியாதையும்,நீதியும் கிடைப்பதில்ல. தற்போது முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய காவலர் ஆணையமானது, காவலர்களின் தீர்க்கப்படாத நீண்டகால குறைகளைத் தீர்ப்பதற்கும், காவலர் – பொதுமக்கள் உறவில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் உரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கை.