கோவை தெற்கு ஜனவரி 14, 2022

கட்சி தலைவர் மற்றும் மற்ற முக்கியஸ்தர்கள் பண்டிகை காலங்களில் தங்களது வாழ்த்துகளை அதன் மூலம் தங்கள் மகிழ்ச்சியை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது சுவரொட்டிகள்.

அப்படி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அதன் பசையின் ஈரத்தன்மை காயும் முன்னரே அந்த சுவரொட்டிகளை கிழித்து எறிந்த மாற்றுக் கட்சியின் சில விஷமிகளின் போக்கு சிறு பிள்ளைத்தனமானது.

இத்தகையை இழிவான செயலில் அவர்கள் ஈடுபட்டது மக்களிடையே வளர்ந்து வரும் செல்வாக்கினை உள்ளங்கைகள் கொண்டு மறைப்பதை போன்றதாக உள்ளது.

இப்படிச் செய்தவர்களை வன்மையாக கண்டிக்கிறது மக்கள் நீதி மய்யம்.

https://twitter.com/NermaiyinK/status/1481976921085063174?t=Q0ycp8KjKCHqptyAVq03ug&s=19