ஆட்சிக்கு வந்த புதிதில் நாங்கள் அறிவித்தபடி அளித்த கொரொனோ நிவாரண நிதி மக்களின் அவசரத் தேவைக்கென அளிக்கப்பட்டது என்று அப்படி அந்நிதியை பெற்றுச்சென்ற பொதுமக்களை புகைப்படம் எடுத்து திமுக விளம்பரம் செய்ததில் சிக்சர் அடித்ததாக அகமகிழ்ந்து உளம் களித்து ஊரெல்லாம் கொண்டாடித் தீர்த்தது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அப்படி கொடுத்த நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட ஓர் மூதாட்டி வேலம்மாள் தன் வாய் கொள்ளாத பொக்கைவாய் சிரிப்பை புகைப்படம் எடுத்த உடன்பிறப்புகள் அதை சமூக வலைதளங்களில் ஒரே நாளில் பிரபலம் செய்து வைரலாக்கினர்.

அப்படி வைரல் ஆன மூதாட்டியை பரிதவிக்க வைத்துள்ளது தற்போதைய நிலைமை உண்ண உணவில்லை, காபி குடிக்கக் கூட காசில்லை, வேலையில்லை என இல்லைகளை பட்டியல் சொல்லும் மூதாட்டி இருக்க இடமில்லாமல் மழைக்கால நேரங்களில் ஒழுகும் வாடகை வீட்டினில் காலத்தை கழித்து வருகிறார். பொக்கைவாய் சிரிப்பின் ஒலி பலகீனத்தின் கீற்றுகளாய் அழுகுரலாய் அதுவும் அவலக்குரலாய் மாறி நிற்கிறது. இதை படமெடுக்கவோ காணொளியாய் பதிவு செய்து வைரல் ஆக்க ஏனோ திமுகவினர் எவரும் முன் வரமாட்டார்.

நீர் மேல் எழுதும் எழுத்துகள் தீர்வல்ல என்று ஆளும் திமுக என்று உணரும் ? மேலும் பாரம்பரியம் மிக்க கட்சி என மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் இன்னமும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் கொள்ளாமல் தங்களை விளம்பரம் செய்துகொண்டே இருக்கும் நிலை தொடருமானால் கடமையைச் செய்வதைக் கூட பெருமையாக சொல்லிக்கொண்டு சுற்றிச் சுழன்று அடிக்கும் பந்துகள் சிக்சர்கள் அல்ல அவை வெற்று பிம்பம் காட்டும் நோ பால்கள் (No Ball) ஆகும்.

https://twitter.com/NermaiyinK/status/1477813115727187974?t=d5DGo5gZeAN56e7qv03H_A&s=19