கோவை பிப்ரவரி 16, 2022
தேர்தல் பரப்புரை செய்ய கோவை மாவட்டம் சென்றிருந்த தலைவர் அவர்கள் மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைவரையும் சந்தித்தார்.
தங்கள் சுயத்தை இழந்து பெயர் பதவி பணம் புகழுக்காக ஆசை கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு இடையில் இப்படி எதற்காகவும் விருப்பம் கொள்ளாமல் தம்மை நல்ல நிலையில் வைத்திருக்கும் தமிழக மக்களின் மனதில் நல் மாற்றம் விதைத்து நாளைய இளைய தலைமுறை நேர்மை துணிவு கொள்ளவே என விரும்பும் புதுமை தலைவர்.
நடைபெற்ற நிகழ்வில் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 41 ஆவது வார்டில் உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் பட்டதாரியான திருமதி நந்தினி தன் வயிற்றில் சுமக்கும் கருவுடன் கர்ப்பிணியாக தேர்தல் களம் காண்கிறார்.
நந்தினியை வரவேற்று பாராட்டி பேசிய தலைவர் தமது எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் துணிச்சலுடன் போட்டியில் நம்பிக்கையுடன் பங்கு பெரும் அவர் தனது இன்னொரு நல்லெண்ணமாக தான் போட்டியிடும் இத்தேர்தலில் பெரும் ஒவ்வொரு வாக்கிற்கும் ஈடாக ஒரு மரக்கன்றினை வரும் ஐந்தாண்டுகளில் நடப்போவதாக என்னிடம் மிகுந்த அக்கறையுடன் சொன்னார்”.
இதை அன்புடன கேட்டுக் கொண்டு பாராட்டிய தலைவர் கமல் ஹாஸன் அவர்கள், ம நீ ம சார்பாக முதல் மரக்கன்று ஒன்றை நந்தினியிடம் அளித்தார்.
இந்நிகழ்வில் துணைத்தலைவர் திரு கோவை தங்கவேலு அவர்கள், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமதி டாக்டர் அனுஷா ரவி அவர்கள் இன்னும் பல நிர்வாகிகள் உடனிருந்து சிறப்பித்தனர்.
தலைவன் நல்வழி எனில் தொண்டர்கள் அவ்வழி. இன்றைய விதை நாளை மரமாகும் உடன் விரைவில் பொதுவுடமையை மெளனமாக பேசும் மரமாகும்.