மதுரை பிப்ரவரி 15, 2022

நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இன்று மதுரையில் பரப்புரை செய்து ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படைத்தேவைகளை கூட ஆண்டாண்டு காலமாக இன்னமும் தீர்க்கப்படாத போக்கை சுட்டிக்காட்டி ஆனால் அதைச் செயததாய் கணக்குகள் காட்டப்படும்.

மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் 586 கோடி, ஆனால் அதற்குரிய எந்த வளர்ச்சிப்பணிகளும் நடந்ததாய் எந்த சுவடும் தெரியவில்லை. குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை பிரச்சினை போக்குவரத்து நெரிசல், எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்கள், கண்டுகொள்ளபடாத நீர்நிலைகள் என போர்க்களம் போன்றதாக காட்சியளிக்கும் மதுரை தூங்கா நகரம் என பெயர் பெற்றதை உண்மையில் சொல்லப்போனால் துயரமான நகரம் என்பதாக தோன்றுகிறது.

ஸ்மார்ட் சிட்டி என ஒருபோதும் அழைக்க இயலா நிலையில் இருக்கும் மதுரையை கழக ஆட்சிகள் கைவிட்டு விட்டன. உண்மையையும் நேர்மையையும் கொண்ட மக்கள் நீதி மய்யம் மூலம் வெல்பவர்கள் மக்கள் பங்கேற்புடன் ஏரியா சபைகள் அமைக்கப்பட்டு இந்தப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும் என்று பேசினார் தலைவர் அவர்கள்.