பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு தினேஷ் பாஸ்கர் சமூக நலம் பெற வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகள் காக்கப்பட வேண்டும் மக்களின் நலத்திட்டங்கள் சரியாய் அவர்களுக்கு அதுவும் சரியான பிரதிநிதிகளின் மூலம் சென்றடைய வேண்டும் எனும் பெரும் சமூக அக்கறைத் தாகம் உடைய ஓர் இளைஞர்.

நாட்டு நடப்பில் தெளிவான விரிவான ஆழமான புள்ளிவிவரங்கள் சரளமான மொழிப் பேச்சுத்திறன் இவரின் கூடுதல் அம்சங்கள்.

நல்லோர் என்றும் நல்லோருடனே கூட்டு சேர்வர் எனும் வாக்கிற்கு ஏற்ப நேர்மையின் உருவமாக திகழும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனில் சேர்ந்தார் தொண்டாற்றி வருகிறார், ஒரு கை ஓசை என்றும் எழாது என தம்முடன் இளைஞர் பட்டாளம் ஒன்றை இணைத்துக்கொண்டு பல கரங்கள் சேர்த்து மூலை முடுக்கெல்லாம் தமது மய்யக் குரலை மக்களின் குரலாய் மாநகராட்சி மாமன்றத்தில் ஒலிக்க சுறுசுறுப்பான தேனியை போல் ஒவ்வொரு துளியாய் மக்களின் அபிமானத்தை தம் கூட்டுக்குள் சேர்கிறார்.

சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுருங்கிப் போயிருக்கும் பல்லாவரம் ஏரியை அதன் இயல்பு நிலை மாறாமல் மீட்டெடுக்க ஆய்வு செய்து தகவல்களை திரட்டியவர் ஜனவரி, 2022 இல் கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மாவட்ட ஆட்சியரிடம் தமது மாவட்ட செயலாளர் திரு மயில்வாகனன் தனிகைவேலு அவர்கள் மூலமாக மனுவும் அளித்து அதற்குண்டான சட்டப்பூர்வ முன்னெடுப்பை ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளும் இவர் மக்கள் நீதி மய்யத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராய் மக்களிடையே.

புதியதோர் எழுச்சியை உருவாக்கிட உழைக்கும் தினேஷ் பாஸ்கர் சில நாட்களுக்கு முன்னர் வித்தியாசமான ஓர் முயற்சியை செய்து அட யார் இவர் என பலரது புருவங்களை உயர்த்தி பார்க்க செய்தார்.

தாம்பரம் மாநகராட்சி வார்டு எண் 25 இல் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இவரை மக்களின் மனம் நிறைந்தும் அவர்களின் அந்த ஒற்றை விரல் டார்ச் லைட் சின்னம் பொத்தானை அழுத்தி வெற்றி பெறச் செய்வார்கள் எனும் தீரா நம்பிக்கையுடன் தலைவரின் ஆசிகளுடன்.

நாளை நமதே !