கோவை பிப்ரவரி 18, 2022

இதுவரை அடித்த கொள்ளை போதாது என்று நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் தேசிய கட்சி என எந்த பாகுபாடும் இல்லாமல் கண ஜோராய் நடக்குது பணம் பொருள் மற்றும் நகைகள் கொடுத்து ஓட்டுகளை வாங்கும் தேர்தல் வியாபாரம்.

என்னங்க இது தேர்தல் வியாபாரம் என்று  சொல்கிறீர்கள் என்றால் அதற்கான பதில் பெரும் வேதனையுடன் ஆற்றாமையுடன் ஆமாம் என்று  தான் சொல்லியாக வேண்டும்.

ஓட்டுக்கு காசு கொடுப்பது பல வருடங்களாக இலைமறைகாயாக இருந்தது இன்று டெக்னாலாஜி மூலம் மொபைல் போன்கள் கொண்டு போன் பே கூகுள் பே எனும் வழியாக டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் நடக்கிறது. அது மட்டுமல்ல பழைய வழிகளின் படி முதலில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு பின்னர் வேறு ஒரு இடத்தில் சென்று ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம். பித்தளை, சில்வர் பாத்திரங்கள், ஹாட் பாக்ஸ் அண்டா குண்டா என கொடுக்கப்படுகிறது.

இவைகளை எதிர்த்துக் கேட்பவர்களை உன்னால் ஆனவற்றை பார்த்துக்கோ இது எங்கள் ஆட்சி அப்படிதான் கொடுப்போம் என்று மிகத் தைரியமாக சொல்லும் உள்ளூர் நிர்வாகிகள்.

இதில் கோவை மாவட்டம் முழுதும் கோடிக்கணக்கில் பணப்புழக்கம் நடப்பதாக அறியப்படுகிறது. கரூர் சிட்டிங் எம்.எல்.எ வும் மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் மதுவிலக்குதுறை என பவர் பாயிண்டாக வலம் வருபவர். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்  என்று நீதிமன்றம் உத்தரவிட்டதில் துவங்கி சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே கோவையில் முகாமிட்டு சகல தில்லுமுல்லுகளையும் ஒன்று விடாமல் செய்துவருகிறார். இப்பணிகளைச் செய்வதற்கு கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும்  உட்கட்சிப் பிரமுகர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு தனது சொந்த ஊரான கரூரைச் சேர்ந்த கட்சிக்காரர்களை களமிறக்கி இந்த தேர்தல் பணிகளை செய்துவருவதாக கோவையைச் சேர்ந்த சக கட்சிக்காரர்களே புகார்ப்பத்திரம் வாசித்தார்கள்.

இன்னொரு சவால் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் மக்கள் நீதி மய்யம் தனது நீதி நேர்மையான கொள்கைகள் மற்றும் பேரன்பின் மிகுதியாக கோவை மாவட்டம் மக்கள் பெரும்பாலோனோர் மய்யத்தின் பக்கம் தமது விருப்பத்தை, நம்பிக்கையை தெரிவித்து வருவது ஓர் காரணம். மய்யத் தலைவர் அவர்கள் சென்ற ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றியின் நெருக்கத்தில் வந்தும் பிற கட்சி மற்றும் உடனிருந்து செய்த துரோகத்தின் விளைவும் மேலும் அவர்களின் சூழ்ச்சியின் காரணமாக எதிர்பாராத தோல்வியை மக்களும் அதிர்ச்சியுடன் கண்டது ஒரு முக்கிய காரணம்.

தோல்வியின் சுவடு காயும் முன்னே அடுத்த நாட்களில் இருந்தே மய்யத்தின் கோவை மாவட்ட அடுத்தகட்ட மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் முதற்கொண்டு கட்சியின் நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் என அனைவரும் தங்களது பணிகளுக்கு இடையே எந்த தொய்வும் ஏற்படாவண்ணம் பிரதிபலன் பாராது செய்த சேவைகளை கண்டு எங்கே மக்களின் அபிமானம் மாறிபோய்விடுமோ என அஞ்சி இப்படி கரன்சிகளை அள்ளி தெளித்து ஓட்டுக்களை அறுவடை  செய்யும் இந்த முறைகேடான பணியில் ஆளும் கட்சியினரின் அராஜகம் நடந்து கொண்டே வருகிறது.

இதனிடையில், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைக்க பா ஜ க வும் தன் பங்குக்கு வெகுமதிகள் தந்துசெல்வது இன்னும்  ஜனநாயகம் முற்றிலும் அழிப்பு என்பதாகும்.

சுமார் 10 வருட காலமாக காத்திருந்த ஆட்சி அதிகாரப் பசி, சென்ற ஆண்டில் பதவியேற்ற நாள் முதல் தமது பண அதிகார கரங்களை அசுரபலத்தில் வீசி எதிர்க்கும் எல்லோரையும் ஒடுக்கி வைக்கும் இந்த திமுக தந்தது தருவது தரபோவதாக சொல்வது எதுவும் விடியல் அல்ல. அடர்ந்த ஊழல் இருள் மக்களின் நம்பிக்கையை பொய்த்துப் போகச்செய்யும் செயல் மற்றும் ஜனநாயகத்தை நீர்த்துப்போக செய்யும் பண அரசியல்.

https://youtube.com/shorts/RID0XDwFQ5U?feature=share

இப்படி அநீதி அக்கிரமம் அராஜகம் செய்து நடக்கும் தேர்தலில் உண்மையாய் நேர்மையாய் மக்கள் பணி செய்தவர்கள் தோற்கடிக்கப்பட்டு இப்படி பணம் பொருள் விநியோகம் செய்தவர் மாமன்றம் சென்றால் அங்கே உண்மை மக்களுக்கான பணிகள் நலத்திட்டங்கள் எதுவும் நடக்காது. அப்படி நடக்கும்  திட்டங்களில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடக்கவே வழிவகுக்கும் இத்தேர்தலை தடை செய்து மீண்டும் ஓர் நாளில் எந்த ஊழலும் இல்லாமல் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக நடைபெறச் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம், கோவை தலைமையகம் சார்பாக மாநில துணைத்தலைவர் திரு கோவை தங்கவேலு அவர்கள், மாநில கொள்கைபரப்புச் செயலாளர் திருமதி டாக்டர் அனுஷா ரவி அவர்கள், மாணவரணி மாநில செயலாளர் திரு ராகேஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருக்க மாண்புமிகு கோவை மாவட்ட ஆட்சியர், தலைமை தேர்தல் அதிகாரி அவர்களிடம் விளக்க மனுவை அளித்தார்.