தமிழகமெங்கும் – நவம்பர் 23, 2௦22

மாற்றி மாற்றி ஆண்ட ஆளும் இரண்டு கட்சிகளில் ஒவ்வொரு கட்சியிலும் மலிந்திருக்கும் ஊழல். இவர்கள் அவர்களை அவர்கள் இவர்களும் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் ஆட்சி முடிந்து அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் முன்னர் ஆண்டுச் சென்ற கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் வழக்குகளாக பதிவு செய்யப்படும் அதன் தொடர்ச்சியாக ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பிரிவு சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் அலுவலகங்களில் அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனைகள் நடைபெறும்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2800886

அதன் எதிரொலியாக இன்னார் இடங்களில் இவ்வளவு கணக்கில் வராத ரொக்கம், தங்க நகைகள் இத்யாதி இத்யாதிகள் கைப்பற்றப்பட்டதாக அறிவிப்புகள் வெளியாகும். அதனை மறுத்து உடனே பேட்டிகள் அறிக்கைகள் கொடுப்பார்கள் அதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்ற வார்த்தை நிச்சயம் இருக்கும். கூடவே அடுத்த நாட்களில் இன்னார் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனியில் அனுமதி என்று எல்லா பத்திரிக்கையிலும் முழுப்பக்க செய்தி வெளியாகும்.

https://tamil.samayam.com/latest-news/state-news/dvac-raids-in-aiadmk-former-minister-kp-anbalagan-house-and-cases-registered/articleshow/89008165.cms

அதற்கு பின்னர் துரிதகதியில் ஒரு முன்னாள் சிறப்பு அதிகாரியை நியமித்து வேகம் எடுக்கும் வழக்கு சில பல நாட்கள் கழித்து அப்படியே மெதுவாகும் ஆமையின் வேகத்தில் நகரத்துவங்கும் பின்னர் அந்த வழக்கின் போக்கு என்ன நிலைமையில் உள்ளது என்று எவருக்கும் தெரியாது, கிணற்றில் போட்ட கல்லாக கூட இருக்காது கடலில் போட்ட கல்லாக அல்லது உப்பாக மாறிப்போகும்.

https://www.puthiyathalaimurai.com/newsview/78703/Fraud-case-against-employer–Court-refuses-to-release-Senthil-balaji

இவையே நிதர்சனம் ஏன் என்றால் ஊழல் செய்வதும் பின்னர் அதற்கான விசாரணையை ரப்பர் கணக்காக நீண்ட வருடங்கள் இழுப்பதும் அல்லது ஒருவழியாக குற்றம் நிரூபணம் ஆகிவிட்டால் தண்டனையை ஒப்புக்கொள்ளாமல் அதற்கடுத்த நீதிமன்றத்தில் வழக்கை அப்பீல் செய்வது என வழக்கமாகிவிட்டது.

கட்டக்கடைசியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது சட்டங்கள் என்பது சமம் ஆனது அல்ல அவை வறியவரிடம் போக்குவரத்து சிக்னல் நிறுத்துக் கோட்டில் சற்று தள்ளி நிறுத்தும் சாமானியருக்கு அபராதம் வசூலிக்கப்படுவதும் ஊழல் அரசியல் கட்சி நபர்கள் ஊழல் செய்து சிறைத் தண்டனை அனுபவிக்கும் போது சிறைச்சாலையில் ஷாப்பிங் செய்வது இந்த நாட்டின் சாபக்கேடு.

இன்னும் வரும்…….