மதுரை பிப்ரவரி

நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மதுரையில் பல இடங்களில் பரப்புரை செய்தார்.

அப்போது மக்களிடையே பேசியதில் சில துளிகள்

“அதோ கேக்குது பாருங்க பொன்னான வாக்கு பொன்னான வாக்குங்கிறாங்களே, அதுல வாக்கு தனி ; பொன்னு தனி ; நாங்க அது இல்ல உங்கள் வாக்கு உங்கள் கடமை அதை நினைவுபடுத்த வந்திருக்கேன் நான். அதை நீங்க செய்ங்க.”

ஆளும் கட்சியினர் தான் உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்தால் பணிகள் சரியாக நடக்கும் என்பது தவறான எண்ணம். உள்ளாட்சியில் சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டு ஜெயித்தால் கூட நடக்கவேண்டிய பணிகள் நிச்சயம் நடந்தே தீரும். ஆனால் ஒருவேளை அப்படி ஜெயிக்கும் வேட்பாளர் நாளை எந்தப் பக்கம் சாய்வார் என்று தெரியாது.

தலைமை நேர்மையாளராக இருக்கும் போது தான் அக்கட்சி கையூட்டு வாங்காமல் நேர்மையுடன் பொதுவெளியில் பயணிக்கும். அதன் நிர்வாகிகள் தலைவர் வழியில் நடப்பார்கள். அப்படி ஓர் நேர்வழியில் செல்லும் தலைவர் ஒருவரே அவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே நீதி நெஞ்சுரம் அறம் கொண்டு நடக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே அதன் மாநில தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் மண்டல அமைப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என நேர்வழி செல்லும் மக்களுக்கான அரசியல் அமைப்பு.

ஆனையூர் பகுதியில்

இம்முறை உங்களின் வாக்குகளை டார்ச் லைட் சின்னத்தில் செலுத்துங்கள் அப்பழுக்கற்ற உள்ளாட்சி நிர்வாகம் உங்கள் முன்னே.