நாங்கெல்லாம் யார் தெரியுமா ? எங்க வரலாறு தெரியுமா ? எங்க கொள்கை தெரியுமா ? எங்க சமூக நீதி தெரியுமா ?

என்று கேட்கும் கழக உடன் பிறப்புகளே. நீங்கள் யார் என்று பெரும்பாலும் தெரிந்திருக்கும். இப்போது மக்கள் உங்கள் பொய் வாக்குறுதிகளை நம்பி ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது கண்டு உள்ளுக்குள் குமுறிப் போயிருக்கிறார்கள்.

உங்கள் கரங்கள் ஊழல் படிந்தவை. பொய்ச் சமூக நீதி பேசும் வாய்வார்தை ஜாலர்கள். குற்றம் சாட்டப்பட்டு இருந்த முன்னாள்களை மிக உயரிய பதவி தந்து இன்னாளகளாக்கி அருகில் வைத்து அழகு பார்க்கிறீர்கள் அதில் வரவும் பார்க்கிறீர்கள்.

டயர்களை கும்பிட்டு பதவி பெற்றவர்கள் என்று அவர்களை நீங்கள் குற்றம் சொல்வீர்கள் அவர்களும் நீங்களும் ஒன்று தான் முதல் எழுத்து மட்டுமே வித்தியாசம் மற்றபடி எல்லாம் ஒன்று தான்.

மக்கள் நீதி மய்யம் எனும் நாங்கள் உரத்துச் சொல்கிறோம் ஓட்டுக்கு பணம் கொடுப்பது வாங்குவது இரண்டும் சட்டப்படி குற்றம் என்று. எந்த வாக்காளர்க்கும் நாங்கள் பணம் பரிசுப் பொருட்கள் என எதையும் ஓட்டுக்காக தரமாட்டோம். எங்கே நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம், கொடுத்ததில்லை என்று, நாங்கள் கொடுப்பதில்லை என்று.

நிச்சயம் உங்களால் அப்படிச் நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல முடியாது. ஏன் என்றால் ஒவ்வொரு பகுதியிலும் உங்கள் கட்சி சார்ந்த நபர்கள் நிர்வாகிகள் என இலஞ்சம் தந்து கொண்டே இருக்கிறீர்கள். இப்படிக் கொடுப்பதை எப்படி எடுப்பீர்கள் ? அதன் சூட்சுமம் உங்களுக்கு தான் தெரியும்.

ஏன் என்றால் வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாம் இருப்பவர்கள் மட்டுமே அந்த ரகசியம் தெரிந்தவர்கள் என்பது தானே உங்கள் கூற்று.

இம்முறை நேர்மையை தேர்வு செய்யுங்கள் நாணயத்தை தேர்வு செய்யுங்கள் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 80 இல் மீட்டிங் மஹால் உள்ளே மாநகராட்சி ஊழியர்கள் பூத் ஸ்லிப் கொடுத்துக்கொண்டிருப்பது கூடவே டோக்கன் கொடுத்து அருகில் நிற்கும் நாயக்கர் தோட்டத்தில் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சென்று பணம் வாங்கிக்கொள்ளும்படி சொல்கிறார்கள், கொலுசு கூடவே 1000 கொடுத்துக்கொண்டிருப்பது குழிதோண்டிப் புதைக்கும் திமுக வின் அடாவடி இவர்கள் கட்சி நடத்துகிறார்களா அல்லது வியாபாரம் செய்கிறார்கள், இதற்கு எதற்காக ஓர் தேர்தல் ?