சென்னை பிப்ரவரி, 05 2022

தன்னிகரற்ற ஓர் தலைவர் தனது உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை நாளை முதல் துவக்குகிறார்.

விடியல் என்பது மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும் தங்கள் சுயநலத்திற்கான அரசியலாக இருக்கக் கூடாது. மீண்டும் அதே தவறைச் செய்து விடாதீர்கள்.

மறைமுக மற்றும் நேர்முகமாக நீங்கள் அரசுக்கு செலுத்தும் பணம் மீண்டும் தரமான சாலைகள், தூய குடிநீர் என்பதாய் நமக்கு திரும்ப வர வேண்டும்.

எனவே விலை மதிப்பற்ற வாக்குகளை சொற்ப பணத்திற்காக விற்று விடாதீர்கள், ஏன் என்றால் இன்று வாக்குகளுக்கு கொடுக்கப்படும் பணம் நாளை உங்கள் பாக்கெட்களில் இருந்து நீங்கள் உணராவண்ணம் எடுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பொது மக்களுக்கு ஊழல் மலிந்த கட்சிகள், மத இன அரசியல் கட்சிகள், பதவி ஆசை கொண்டு தங்கள் கொள்கைகளை கழகங்களில் அடகு வைத்த பிற கட்சிகளின் சந்தர்ப்பவாத நிலைகளை உணரும்படி செய்யுங்கள்.

அப்படிச் செய்தால் நாளை நமதே நிச்சயம் நமதே

சீரமைப்போம் தமிழகத்தை !