மநீம பிப்ரவரி 3, 2022

இளைஞர்கள் கைகளில் பேனாக்கள் இருப்பது நல் கருத்துகளை கட்டமைக்க என்பது நீண்ட கால கருத்து.

நேர்மைக்காக எதையும் விட்டுத்தராத ஓர் பண்பான தலைவரின் தலைமையில் இணைந்து புது சரித்திரம் எழுதிட இளைஞர்கள் படை எனும் பேராயுதம் தாங்கி வருகிறது மக்கள் நீதி மய்யம்.

இதர கட்சிகளில் அமர்ந்த இடத்தை வருடக்கணக்கில் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல அதனூடே அதிகாரம் சேர்த்து பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிடச் செய்யும் வயது முதிர்ந்த செயலாளர்கள் மத்தியில் கூர்ந்து நோக்கும் திறனுடன், துடிப்புடன் பொதுச்சேவையில் ஆர்வமுடன் நற்பணிகள் செய்திடும் எமது மய்யத்து இளைஞர் படையின் நல் வீரர்கள் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகளை வென்றெடுத்து வெற்றிக் கோப்பையை கைப்பற்றிட அணிவகுத்து வருகின்றனர்.

போடிநாயக்கனூர் பகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர்கள் நிர்வாகிகளில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போடி நகராட்சி வார்டு உறுப்பினர்கள் வேட்பாளர்களாக போட்டியிட இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர்.

நாங்கள் மற்ற கட்சிகளை விட வேறுபட்டவர்கள் என்பதை தனது அறிவிப்பின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 51 இல் போட்டியிடும் மய்யம் மாவட்ட அமைப்பாளர்-தொழில் நுட்பப்பிரிவு பொறுப்பு வகிக்கும் திரு.ச கார்த்திக் ராஜ், 1 ஓட்டு = 1 மரக்கன்று நடப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது, தனக்கு போடப்படும் ஓட்டுக்கள் எண்ணிக்கையில் அதே அளவு எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்ட பொதுவெளியில் மரக்கன்றுகள் நடுவேன் என்று சுற்றுச்சூழல் பேணும் நல்லெண்ணத்துடன் செய்துள்ள அறிவிப்பு இதுவரை எவரும் சொல்லாதது. சுவாசிக்கும் உயிர்க்காற்றை தரும் மரங்கள் முக்கியம் என்பதை உணர்த்தும் இவர் வெற்றியை தலைவரின் கரங்களில் சமர்பிப்பேன் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை மாநகராட்சி விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 128 இல் போட்டியிடும் இளம் வேட்பாளர் செல்வி பொன்னழகி (21)