சென்னை, பிப்ரவரி 02, 2022

இன்றைய விதைகள் – நாளைய விருட்சங்கள் ஆக மாறலாம்.

“நான் மட்டுமே காலங்கள் முழுதும் ஓர் தலைவனாக என்னை வரித்துக் கொள்ள இங்கே வரவில்லை, தன்னலம் பாரா தலைவன் இன்னும் ஒருவர் இருக்கிறார் எனில் அவரை நான் தேடிக் கொணர்வேன், இங்கே தலைவனாய் இருத்தி வழி நடத்தச் சொல்வேன்” என்பதாய் அவ்வப்போது சொல்லும் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் எண்ணங்கள் என்றும் கையகல அளவல்ல அது வானம் போல பரந்துபட்ட அறிவுடன், அறம் கூறும் நல் வழி சொல்லி இயங்கும் மனது.

தலைவர் திரு. கமல் ஹாசன்

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனக்கான நேர்மையான பாதையில் பயணிக்க அப்பழுக்கற்ற நேர்மையாளர்களை வேட்பாளர்களாக களம் இறக்குகிறது. இதில் அனுபவ அறிவுடையோர் உண்டு, பட்டதாரிகள் உண்டு, தொழில் முனைவோர் உண்டு, இல்லம் காக்கும் மகளிர் உண்டு, இளம் மாதர்கள் உண்டு, மாற்றுத்திரனாளிகள் என பலதரப்பட்ட வல்லவர்களை தேர்வு செய்து உள்ளது வெகு சிறப்பு.

அவ்வகையில் இளம் தலைமுறையினர் பலர் உள்ளாட்சி தேர்தலில் வென்று தங்கள் கடமையை செய்திட பெரும் ஊழல் முதலைகளை எதிர்த்து களம் காணுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெல்லப் போவது நிச்சயம்.

மக்கள் நீதி மய்யம், துடிப்பான இளைஞர், மாணவரணி மாநில செயலாளர் திரு. ராகேஷ் குமார் ராஜசேகரன், கோவை தெற்குத் தொகுதியின் வார்டு எண் 69 போட்டியிடுகிறார்.

மாணவரணி மாநில செயலாளர் ஆன ராகேஷ் குமார் ராஜசேகரன் தான் போட்டியிடவிருக்கும் கோவை மாநகராட்சி தேர்தல் வார்டு கவுன்சிலர் பதவிக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்போது அங்கே உடன் சென்று வாழ்த்தி தனது பாராட்டுக்களை தெரிவித்தார் மாநில துணைத்தலைவர் திரு கோவை தங்கவேலு அவர்கள் மற்றும் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் திருமதி டாக்டர் அனுஷா ரவி மற்றும் மண்டல அமைப்பாளர்கள் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செல்வி இலக்கியா தன்னை அர்ப்பணித்து உளமார செய்து வரும் செவிலியர் பணியினை சிரமேற்று சீர்படச் செய்திடும் அவர் தனது 24 வயதில் தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டி அரசியல் களம் இறங்கும் இடம் மதுரை மாநகாராட்சி வார்டு எண் 14.

இவரும் துடிப்பான இளைஞர் படையைச் சேர்ந்தவர், திரு கி.வி.யோகராஜ் எனும் 23 வயதுடைய மய்யத்தின் துணைச்செயலாளர் குமாரபாளையம் நகரைச் சேர்ந்தவர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக 29 ஆவது வார்டிற்கான நகர் மன்ற உறுப்பினர் பதவிக்கு எந்தப் பணபலமோ, படை பலமோ இன்றி ஜனநாயகத்தின் வலிமையை நம்பியும் நேர்மையும் துணிவும் கொண்ட தலைமையை நம்பியும் களமிறங்கும் நான் நிச்சயம் வெல்லவே பாடுபடுவேன், வென்றதும் மக்களின் நலனுக்காக சமுதாய நலனுக்காக தொடர்ந்து உழைத்திட விழைகிறேன்.

அடுத்ததாக மய்யத்தின் சார்பாக 21 வயதே ஆன இளம் வேட்பாளர் திரு ராஜசேகர் போட்டியிடவிருக்கும் இடம் குமாரபாளையம் நகர 25 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்காக களம் காணும் இவர் தான் போட்டியிடும் வேட்பாளர்களை விட வயதில் மிகவும் இளையவர் ஆவார்.

மேலிருந்து கீழ் : திரு ராகேஷ்குமார், செல்வி இலக்கியா, திரு ராஜசேகர்

ஓசூர் நகராட்சி 10 ஆவது வார்டில் போட்டியிடும் திரு தௌசிப், மக்கள் நீதி மய்யம் கிருஷ்ணகிரி மேற்கு & தளி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆக பொறுப்பு வகிக்கும் இவரும் போட்டியிடும் இளையோரில் ஒருவரே.

இடமிருந்து வலமாக கி வி யோகராஜ், தௌசிப்

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 23 ஆவது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வேட்பாளராக போட்டியிடும் இன்னுமொரு இளைஞர் திரு S. ரோஹித் ராஜ், இளைஞரணியின் நம்பிக்கை நட்சத்திரம்.

S.ரோஹித் ராஜ்

பொள்ளாச்சி நகராட்சி வார்டு எண் 26 இல் களம் காணும் திரு கே மோகன், 21 வயதே நிரம்பிய மற்றுமொரு வேட்பாளர் தலைவரின் இளமையே புதுமையாய் எனும் உத்வேகத்துடன் களத்தில் நிற்கிறார்.

கே மோகன் – பொள்ளாச்சி

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் மாநகராட்சி வார்டு எண் 190 ஆவது வார்டு உறுப்பினராக போட்டியிடும் இளைஞர் திரு ஷங்கர் ரவி நற்பணிகள் நிறைய செய்துள்ளார், அப்பகுதியை மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து தருவதாக வாக்களித்து களத்தில் நிற்கும் மய்யத்தின் மற்றுமொரு இளவல் வெற்றி பெற வேண்டும் என அயராது உழைத்துக்கொண்டிருக்கும் இளைஞரணி பிரமுகர்.

ஷங்கர் ரவி

தாம்பரம் நகராட்சியை சேர்ந்த பல்லாவரம் பகுதி மண்ணின் மைந்தனாக, தலைவரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு மக்கள் நீதி மய்யத்தின் மீதான நம்பிக்கை பன்மடங்காக பெருகிட தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து மக்களிடையே செயலாற்றி இப்போது தாம்பரம் மாநகராட்சியின் 25 ஆவது வார்டு உறுப்பினராக தேர்வு பெறவேண்டி வேட்பாளராக களமிறங்கும் திரு தினேஷ் பாஸ்கர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பல்லாவரம் ஏரியை மீட்க கையெழுத்து போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் பாஸ்கர்

தங்கள் தலைவரையும் அவருடைய நேர்மையும் துணிவும் எவர்க்கும் அஞ்சாத நெஞ்சுரமும் ஆகியவற்றால் கவரப்பட்ட இவ்விளையோர் படை தங்களது நேர்மை, துணிவு ஜனநாயக நம்பிக்கை கொண்டு நிகழவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வீரமே வாகையே சூட வெற்றிகளினால் மக்களின் மனதில் நம்பிக்கை விதையை விதைப்பார்கள் என்று உளமார வாழ்த்துகிறது மய்யத்தமிழர்கள்.