சென்னை பிப்ரவரி 1, 2022

உழைப்பை நம்புங்கள் எந்நாளும் கைவிடாது எனும் தலைவரின் கூற்றுப்படி ஓர்ஆட்டோ ஓட்டுநர் ஸ்டியரிங் பிடிக்கும் கைகளில் மக்கள் நீதி மய்யம் தனை போற்றும் பிரச்சார பாடல்களை வடிக்க பேனா பிடித்து எழுதி பாடியும் இருக்கிறார்.

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் திரு கேசவன் (மயிலை கேசவன்) அவர்கள் மக்கள் நீதி மய்யம் கொள்கைகளை, சிறப்புகளை கொண்டு தானே பாடல்களை எழுதி இசை சேர்த்து பாடிய பாடல்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையப் பிரிவு (IT) மூலம் தொகுத்து தயாரிக்கப்பட்ட இசைத்தட்டு தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களால் இன்று சென்னை தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

உடன் இணையப் பிரிவின் மாநில செயலாளர் திரு கிருபாகரன் உடனிருந்தார்.

நமது மய்யம் உறவுகள் மற்றும் நிர்வாகிகள் இதனுடன் இணைத்துள்ள லிங்க் மூலம் பாடல்களை தரவிறக்கம் செய்து தங்கள் பிரச்சாரத்திற்கு உபயோகம் செய்து கொள்ளலாம்.

தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களுடன் இணைய பிரிவு மாநில செயலாளர் திரு கிருபாகரன் மற்றும் திரு மயிலை கேசவன் அவர்கள்.