மக்கள் பங்கேற்புடன் கூடிய ஊழலற்ற, வெளிப்படையான, தரமான, அடிப்படைக் கட்டமைப்புகளை தரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்திற்கான வாக்குறுதிகள்.
1.அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர்.
2.அந்தந்த பகுதி மக்களே முடிவு செய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி.
3.வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கும் கவுன்சில் கூட்டம் விவரங்கள் இணையதளத்தில் நேரலை செய்யப்படும்.
4.தொழில்நுட்பத்தின் உதவியோடு வீடு தேடி உள்ளாட்சி சேவை மையம்.
5.தரமான சாலைகள்.
6.தொழில்நுட்ப உதவியுடன் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி.
- ஒவ்வொரு தெருவிலும் ஸ்மார்ட் கழிவு தொட்டி அமைத்து குப்பை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்.
- வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற வரிகளை வசூலிக்கும் முறை சீரமைக்கப்படும். பள்ளிகள் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும் முறையான பராமரிப்பின் பூங்கா உடற்பயிற்சிகூடம் மற்றும் நூலகம் அமைப்பது உறுதிசெய்யப்படும்.
- ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைக்கப்படும். இதன் மூலம் அவசர ஊர்திகள் சென்சார் உதவியுடன் கண்டறிந்து தடையில்லா போக்குவரத்து உதவி செய்யப்படும்.
- மழைநீர் தேங்காத தெருக்கள் என்ற நிலையை அடைய முறையான மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.
- நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் கட்டிட வரைபட அனுமதிகள் விரைவாக லஞ்சம் இல்லாமல் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். என மேற்கண்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ம.நீ.ம வின் வாக்குறுதிகளை வெளியிட்டார் தலைவர் திரு. கமல்ஹாசன். மேலும் அவர் தகுதியும், திறமையும், நேர்மையும் கொண்ட எங்களது வேட்பாளர்களுக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள், மாற்றத்தை உணருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.