சென்னை ஏப்ரல் 02, 2022

ஆட்சிக்கு வந்து 10 மாதங்களை நிறைவு செய்வதற்குள் என்னென்னவோ மாற்றங்கள் அவை பொய்களின் ஏற்றங்கள் எனலாம். எல்லாவற்றுக்கும் ஓர் தெளிவான விளக்கங்கள் அல்லது அவை ஒப்புக்கொள்ளக்கூடிய வகைகளில் இல்லை என்பதே முரண்.

கடந்த 2018 இல் நடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 50% முதல் 100% சதவிகிதம் வரை சொத்து வரியை உயர்த்தியதாக அவர்களை குற்றம் சாட்டியும் கண்டித்தும் அறிக்கை வெளியிட்ட செயல்தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் திமுக சார்பில் தமிழகம் முழுக்க மாநகராட்சி நகராட்சி அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்தார்.

சுமார் 25% முதல் 150% சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும் என பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளனர்.

சொத்து வரியை உயர்த்தினால் மட்டுமே உள்ளாட்சி நிதியை விடுவிக்கபடும் என்ற மத்திய அரசின் நிர்பந்தத்தின் காரணமாக தான் தற்போது சொத்து வரை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசிற்கு ஏற்பட்டுள்ளதாக தெரவித்துள்ளார் அமைச்சர் கே என் நேரு. அப்படி என்றால் கடந்த 2018 ஆம் ஆண்டில் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் சிதம்பரத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை உயர்த்திய அதிமுக அரசினை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தியது ஏன் ?

https://www.maalaimalar.com/news/district/2018/07/27155720/1179606/DMK-demonstration-led-by-mrk-panneerselvam-against.vpf

திமுக கடந்த ஆண்டின் தேர்தலின்போது கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் சீராகி நிதிநிலைமைகள் மேம்படும் வரை சொத்துவரி உயர்த்தபடமாட்டாது என்று எண் 487 இன் படி கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று ? தற்போது வந்த அறிவிப்பின் படி சொத்து வரி உயர்த்தபட்டுள்ளது என்றால் கொரொனோ தொற்று இல்லாமல் போய் விட்டு பொருளாதாரம் மேம்பட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா ?

இப்படி மத்திய அரசின் நிர்பந்தம் என்று சொல்லிக்கொண்டே இன்னும் எதில் எல்லாம் மக்களை வஞ்சிக்க போகிறீர்கள் ? என்ன மாதிரியான நிர்ப்பந்தம் உங்களுக்கு மத்திய அரசு தருகிறது என்று வெட்டவெளிச்சமாக ஏன் அறிவிக்கவில்லை

மத்திய அரசின் இந்தப் போக்கை கண்டித்து எந்தவித எதிர்ப்பும் நீங்கள் காண்பிக்க வில்லை எனில் நீங்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் மாநில சுயாட்சி என்பது வெறும் வாய் வார்த்தைக்கும் மக்களிடையே இருந்து பெறும் வாக்கிற்கு மட்டுமா ?