தாராபுரம் ஏப்ரல் 01, 2022

சின்ன க்ளு கொடுத்தால் கூட ஆட்டோ ஓட்டுனர்கள் அட்ரஸ் சரியாக தெரியாமல் தவிக்கும் நம்மை அழகாக கொண்டு சேர்க்கும் திறன் கொண்டவர்கள். தினசரி எகிறும் பெட்ரோல் விலை, வருடத்திற்கு உயரும் வாகன காப்பீட்டு தொகைகள், புதுப்பிக்கும் செலவுகள் என கண்ணைக் கட்டும் பிரச்சினைகள் ஊடே சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாவற்றிலும் புகுந்து புறப்படும் ஆட்டோ ஒட்டுனர்களை தங்களது பிரச்சாரத்திற்கு அழைத்துக்கொண்டு ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப்போறாரு என்று சந்து பொந்து விடாமல் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளில் அலறவிட்டு திமுகவை ஆட்சியில் அமர வைத்ததில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உண்டு.

சட்டமன்ற தேர்தல் பரப்புரை மட்டுமல்லாது உள்ளாட்சித் தேர்தலில் பட்டி தொட்டி எங்கும் பிரச்சாராம் செய்ய ஆட்டோ மிகச்சிறந்த வாகனம் அவற்றை இயக்கிய ஓட்டுனர்/உரிமையாளர்களை அலைகழிக்கும் அவலம் தாராபுரத்தில் நடக்கிறது. மத்திய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டை காலி செய்து தரும்படி மிரட்டல் விடுப்பது வேறு யாரோ அல்ல அங்கே 23 ஆவது வார்டு கவுன்சிலர் ஆக இருக்கும் துரை சந்திரசேகர் மற்றும் நகர துணைத்தலைவர் ஹோட்டல் ரவி எனும் இருவரும் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக ஆட்டோ ஸ்டாண்டை காலி செய்து தரும்படி அராஜகத்தில் ஈடுபடுவதாக பேனர் சகிதமாக சுமார் 70 ஆட்டோ டிரைவர்கள் ஒன்று கூடி நின்று கோஷம் எழுப்பினர்.