மே 12, 2022
கடும் முயற்சியும் தெளிவான உறுதியான எண்ணமும் இருந்தால் சாதிக்க எந்த குறையும் ஒரு பொருட்டல்ல என்ற உண்மையை உணரவைத்திருக்கிறார் தமிழகத்தின் நட்சத்திரமாக ஜொலித்து நம்பிக்கையை விதைத்து உள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மதுரையில் உள்ள பள்ளியொன்றின் மாணவி செல்வி ஜெல்வின் அனிகா. பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திரனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற பேட்மிண்டன் பந்தயத்தில் இரண்டு தங்கப்பதங்கள் வென்று தமிழகத்தின் தங்கமகளாக திகழ்கிறார். போட்டியில் வென்று சாதனை படைத்ததற்கு உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.