சிவகங்கை மே 12, 2022

முறையே பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் கணக்கு, பொருளாதார பாடங்களில் கடன் வாங்குதல், பற்று வரவு போன்றன கற்பிக்கப்படும். இவையெல்லாம் காலங்காலமாக பயின்று வருவதே. தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதியாண்டு கணக்குகளில் பள்ளிகல்விதுறைக்கு ஒதுக்கப்படும் தொகைகள் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளும் அதில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காகவும் செலவிடப்படும்.

இதில், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசுபள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகளில் விநியோகிக்கப்படும் வினாத்தாள்களில் பற்றாக்குறை ஏற்படுவதாக அறியப்படுகிறது. ஒரே வினாத்தாளை வைத்து 3 மாணவர்கள் தேர்வுகள் எழுதப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு விசாரணை செய்து உண்மை நிலையை கண்டறிந்து அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுகொள்கிறது.

37000 கோடி ரூபாய்கள் செலவிடும்போது பள்ளிக்கல்வித்துறையில் சுமார் 30 ரூபாய் இல்லையா ?

என்னங்க இது இப்படி ஒரு கேள்வியை அதுவும் திராவிட மாடல் ஆட்சியாளர்களை பார்த்துக் கேட்கிறீர்கள் என்று நீங்கள் புருவம் உயர்த்தி ஆச்சரியபார்வை பார்ப்பது எம் கண்களுக்கு புலப்படுகிறது. விஷயம் இதுதாங்க “பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு மத்திய உணவு, ஊட்டச்சத்து பெற தேவையான பால் முட்டை வழங்குதல் தொடர்ந்து வழங்கப்படுகிறது. தற்போது சில நாட்கள் முன்னதாக காலையிலும் சிற்றுண்டி வழங்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் ஓர் அறிவிப்பினை வெளிட்டுள்ளார் அது நிச்சயம் வரவேற்பிற்குரியது (நிற்க இதே போல் காலை மாணவர்களுக்கு சிற்றுண்டி அதிமுக அரசு காலத்தில் “அட்சயப் பாத்ரா” எனும் சமூக ஆர்வலர் குழுமம் மூலமாக வழங்கப்பட்டது என்றும், பிற்பாடு கொரொனோ விதிமுறைகளின் போது அத்திட்டம் நிறுத்தப்பட்டதாகவும் தரவுகள் மூலம் சொல்லப்படுகிறது).

சரி அந்த 30 ரூபாய் விஷயத்துக்கு வருவோம். கல்வியின் முக்கியத்துவம் கருதி இப்போதைய தமிழக அரசு அத்துறைக்கு தாராளமாக 37000 கோடி ரூபாயை ஒதுக்கியு, இலவசக்கல்வி, சத்துணவும் வழங்கும் சூழலில் தேர்விற்கான வினாத்தாள்களை அச்சடிக்க வேண்டும் என ஒவ்வொரு மாணவரிடமும் அச்சடிப்பு கட்டணமாக இன்னும் ரூ.30 வசூலிப்பது தொடர்கிறதே ஏன் ? இந்தக்கட்டணத்தை வசூலிப்பதை ரத்து செய்துவிட்டு தமிழக அரசின் பள்ளிக்கல்விதுறையே அதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்பதையும் தமது ஆணித்தரமான கருத்தாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

https://www.dailythanthi.com/News/State/2022/03/18111925/Tamil-Nadu-budget-Rs-36000-crore-financial-allocation.vpf

பிளாஷ்பேக் :

தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதற்கு முந்தைய ஆண்டை விட 1582 கோடி ரூபாய்கள் குறைக்கப்பட்டதாகவும் தெரிகிறது

https://tamil.news18.com/news/tamil-nadu/tn-budget-2021-rs-1582-crore-cut-for-school-education-sur-532493.html