நாமக்கல், ஜூலை 22, 2022

மக்கள் நீதி மய்யம் துவங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது, பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்தது. எந்த இன்னல்கள் இடறுகள் வந்தாலும் அவற்றை புறந்தள்ளி முன்னேறும் ஓர் கட்சியாக வளர்ந்து வரும் மக்கள் நீதி மய்யம் இன்னும் அதிகமாய் கிராமப்புறங்களில் வேரூன்ற வேண்டி தமிழகமெங்கும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் ஆலோசனைபடியும் வழிகாட்டுதல்படியும் மாநில செயலாளர்கள் மற்றும் மாநில துணைசெயலாளர் முறையே திரு சிவா இளங்கோ, திரு செந்தில் ஆறுமுகம், திரு மயில்சாமி மற்றும் திரு ஜெயகணேஷ் ஆகியோர் தலைமையிலும் முன்னிலையிலும் மாவட்டங்கள் வாரியாக சிறப்பாக நடந்து வருகிறது. இதனிடையே துணைத்தலைவர் திரு கோவை தங்கவேலு அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதன்படி இன்று நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளும் பயணத்தில் இன்று (22.07.2022) நாமக்கல் மேற்கில் நம்மவரின் தளபதிகள்”.