விருதுநகர், ஜூலை 07, 2022

நாம் இருக்கையில் உடனிருக்கும் சொந்தம் பந்தம் நண்பர்கள் மற்றும் பலர். இவை யாவும் இல்லாத ஆதரவற்றவர்கள் எண்ணிலடங்கா எங்கெங்கும் சாலையோரங்களில், பாலங்களுக்கு அடியில், குப்பைக் கிடங்குகள் என கிடைக்கும் இடங்களில் தம்மை ஒண்டிக்கொண்டு பிறர் தரும் உணவையும் தண்ணீரையும் உண்டு அருந்தி உயிர் வாழ்ந்து வருவர்.

அப்படி எந்த ஆதரவற்றோரும் திடீரென மரணிக்கையில் அவர்களின் உடல்கள் எப்படி எங்கே இருக்குமோ அங்கேயே சில நாட்கள் ஈக்கள் எறும்புகள் மொய்க்க காணப்படும். அப்படி இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தெருவில் வசிப்பவர்களோ இப்படி ஆதரவு இல்லாத மனிதர்களோ எந்த பாரபட்சமும் இன்றி பிறர் தயங்கி நின்றாலும் முதல் ஆளாக அங்கே சென்று அவர்களின் உடல்களை பெற்று இறுதிச்சடங்குகளை மிகக் கண்ணியத்துடன் செய்து முடிக்கிறார். இந்த அரும்பெரும் நற்செயலை தனது முதல் கடைமையாக செய்துவரும் சிவகாசியை சேர்ந்த திரு நாகராஜ் அவர்கள் நம்மவர் தலைவரின் தீவிர பற்றாளர் அவரின் மேல் அபரிமிதமான அன்பும் மிகுந்த மரியாதையும் கொண்டவர். மேலும் அவர் விருதுநகர் மத்திய மாவட்ட நற்பணி இயக்க அமைப்பாளர் பதவி வகித்துவரும் அவர் செய்துவரும் பெரும் சேவையை பாராட்டி வாழ்த்துகளை மக்கள் நீதி மய்யம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு G. நாகராஜன் அவர்கள்.

எவரும் செய்ய தயங்கும் இச்செயலை எந்த முகச்சுளிப்பும் தயக்கமும் இன்றி மிகுந்த சிரத்தையுடன் இப்பணியை செய்து வரும் திரு நாகராஜ் அவர்களை உளமார வாழ்த்துகளையும் கூறி நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம் சார்பில் நம் மய்யதமிழர்கள்.

https://twitter.com/GuruswamyNagar2/status/1545064750039461888?s=20&t=PRz6DnXbKSrN-IhaOWuSFg

லயன்ஸ் கிளப் நடத்திய பாராட்டு விழா.