சென்னை ஆகஸ்ட் 22, 2022

எத்தனை முறைகள் ஆட்சி மாற்றம் வந்தாலும் இன்னமும் முழுமையாக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லாமல் இருக்கும் சென்னை நிதிகள் ஒதுக்கப்பட்டு பொலிவு பெறும் என்று கூறி அதை வெறும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள் காண்பித்து அவையே மாற்றம் அடைந்தது என கணக்கு எழுதி கடமையை நிறைவேற்றியது என கோப்புகளை எடுத்து ஓரம் வைக்கிறார்கள்.

இதை ஆட்சியாளர்களும் சரி அவர்களின் மேற்பார்வையில் இயங்கும் துறைகளும் சரி இப்பணியே போதும் என்று அமைதி கொள்கிறார்கள்.

பொதுமக்களும் அந்த நாளின் சிறப்புக்கு ஒர் வாழ்த்துகள் எனும் குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு அவர்களும் அடுத்த நிகழ்வுகளில் மூழ்கிப் போகிறார்கள்.

வெயில் அடித்தால் கூட பரவாயில்லை பொறுத்துக் கொண்டு நகரும் நம் மக்கள் மழையடித்தால் அச்சம் கொள்கிறார்கள். ஏன் எனில் பெருக்கெடுத்து ஓடிவரும் மழை வெள்ளம், மூழ்கும் வீடுகள் வாகனங்கள், கால்நடைகள், செல்லப் பிராணிகள் மின் சாதனப் பொருட்கள் என பெரும் சேதத்தை அனுபவித்து அழுது புலம்பித் தீர்க்கிறார்கள் ஆட்சியாளர்களை குறை கொட்டிக் கொள்ளும் அவர்கள் மீண்டும் அதே கட்சியை அல்லது அது போன்ற மற்றுமொரு கட்சியை தேர்வு செய்து மீண்டும் பழைய நிலை தான்.

எந்த ஊழலும் இன்றி முறைகேடுகள் எதுவும் இன்றி ஓர் நல்லாட்சியை தந்தால் மட்டுமே ஆண்டாண்டு காலமாய் சீராக இல்லாமல் இருக்கும் சென்னை மீண்டு வரும் வண்ண வண்ண விளக்குகள் இன்றி பொலிவு பெறும் என்பதை மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் அமர்வதன் மூலம் கண்டுணரலாம்.

சென்னை தினம் பற்றிய மக்கள் நீதி மய்யம் அறிக்கை உங்கள் பார்வைக்கு :

தமிழகத்தின் தலைநகரில் ஒருபுறம் ‘சென்னை தினம்’ கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மலைபோலக் குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளால் துர்நாற்றமும், சுகாதாரச் சீர்கேடும் உண்டாகி, மக்களைப் பரிதவிக்கச் செய்கிறது.

நகரின் முக்கிய நீர்நிலைகளில் 357 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகக் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகளாகியும், அதை இன்னும் முழுமையாகத் தடுக்கவில்லை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்.

அடையாறு, கூவம் ஆறுகளிலும், பக்கிங்ஹாம் கால்வாயிலும் குப்பை, கழிவுகள்தான் நிரம்பியுள்ளன. நீர்நிலைகள் சீரமைப்புக்காக இதுவரை பல்லாயிரம் கோடி செலவிடப்பட்டும், நீர்வழிச் சாலைகள் சாக்கடைக் கால்வாய்களாகவே உள்ளன. இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல்,

குப்பை, கழிவுகளை முழுமையாக அகற்றி, பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. – மக்கள் நீதி மய்யம்