குஜராத், ஆகஸ்ட் 26, 2022

பல ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை 11 பேர்கள் கொண்ட வெறியாட்ட கும்பல் ஒன்று வன்புணர்வு செய்தது. அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு பல கட்ட விசாரணைகள் நடக்கப்பெற்று பின்னர் அவர்கள் அனைவர்க்கும் நீதிமன்றம் தண்டனைகள் அளித்து சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தனை ஆண்டுகாலம் கழித்து நமது இந்திய நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர நாள் முன்னிட்டு அவர்கள் அனைவரையும் நன்னடத்தையின் விதிப்படி விடுதலை செய்ததாக நீதிமன்றம் அறிவித்து அதன்படியே அவர்கள் அனைவரும் எந்த நிபந்தனையும் இன்றி விடுதலையானார்கள்.

விடுதலை அடைந்த அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிஜேபி கட்சியினர் உட்பட பலரும் உற்சாகத்துடன் கொண்டாட்டமும் அடைந்தார்கள் அது மட்டுமல்லாமல் அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். நிறைமாத கர்ப்பிணிப்பெண் என்றும் பாராமல் செய்ய அஞ்சும் கொடூர செயலை செய்தவர்களுக்கு கடுங்காவல் தண்டனையை அவர்களின் மரணம் வரை அனுபவித்து இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏகோபித்த விருப்பமாகும். ஆனால் கொஞ்சமும் மனசாட்சியின்றி அஹிம்சைக்கும் பெண்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்த நமது இந்திய நாட்டின் தேசப்பிதா என்று பெருமிதத்துடன் அழைக்கக்கூடிய மகாத்மா காந்தி பிறந்த பூமியான குஜராத்தில் இப்படி ஓர் கொடுஞ்செயல் புரிந்தவர்களின் விடுதலையை ஒப்புக் கொள்ள முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கடுமையாக தமது கண்டனங்களை முன்வைக்கிறது. இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டிருக்கும் இவ்வேளையில் உச்சநீதிமன்றத்தின் உயரிய மாண்பினை காத்துவரும் மாண்புமிகு நீதியரசர்கள் இந்த விடுதலையை ரத்து செய்து அவர்களுக்கு நிபந்தனையற்ற கடுமையாக இருக்ககூடிய தண்டனையை அளிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.

மய்யத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அணியின் மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம் அவர்களின் அறிக்கையை உங்களின் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் விடுவிப்பு! கொடூரக் கும்பலுக்கு ஆரத்தி: மக்கள் நீதி மய்யம் கண்டனம். உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டவேண்டும். – திருமதி மூகாம்பிகை ரத்தினம்

https://tamil.oneindia.com/news/delhi/2-bjp-mlas-behind-the-release-of-bilkis-banu-rape-criminals-471456.html

https://www.dailythanthi.com/News/State/bilgis-banu-case-is-there-no-place-for-justice-in-gandhis-birthplace-mnm-condemnation-778108

https://www.kalaignarseithigal.com/india/2022/08/20/america-uscirf-condemns-for-releasing-rape-convicts-in-bilkis-bano-case