நாகப்பட்டினம், ஆகஸ்ட் 21, 2022

மக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை அரசின் பல துறைகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் கால அவகாசங்கள், நேரங்களில் தாமதமில்லாமல் சரியான் சமையத்தில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும் சட்டமே சேவை உரிமைப் பெறும் சட்டமாகும். இச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பெரும் திரளான ஆர்ப்பாட்டம் ஒன்றை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முன்னின்று சிறப்பாக நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ, மாநில இணைச் செயலாளர் திரு ஜெய்கணேஷ் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். மேலும் மாநில துணைச் செயலாளர் திரு சண்முகராஜன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் திரு அனீஸ் அவர்கள், இன்னும் பல மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

“இன்று மாலை ம.நீ.ம சார்பில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நாகையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நானும் மாநில.இ.செ திரு. ஜெய்கணேஷ், மாநில து.செ திரு சண்முகராஜன், மா.செ திரு.M. சையத் அனஸ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.” – திரு சிவா இளங்கோ, மாநில செயலாளர்