கோவை, ஆகஸ்ட் 25, 2022

தமிழக அரசின் பல துறைகளில் மக்களுக்கான சேவைகள் கிடைக்கபெறுகின்றனவா என்றும் அதுவும் குறிப்பிட்ட காலத்தில் லஞ்சமும் கொடுக்கப்படாமல் செய்து தரப்படுகிறதா என உறுதி செய்யும் சட்டமே சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகும்.

கிராமசபை என்றால் என்னவென்றே தெரியாமல் அல்லது மறந்து போனதை தமிழகமெங்கும் மீண்டும் நடக்க வைத்ததில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் ஓங்கி ஒலித்த குரல் மூலமாக தான். இது போல் ஓர் உள்ளாட்சிக்கான கணக்கு வழக்குகள் மற்றும் செய்து முடிக்கப்பெற்ற, செய்ய வேண்டிய திட்டங்கள் எல்லாவற்றையும் வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் கிராம சபைகளில் அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும்படிச் செய்ததில் முழு முதற் பங்கு மக்கள் நீதி மய்யம் மட்டுமே.

இந்த சேவை பெறும் உரிமைச் சட்டம் என்பது நாம் பெற வேண்டிய சேவைகளை குறிப்பிட்ட கால நேரங்களில் கிடைக்க வழிவகை செய்வதை உறுதி செய்யும் இச்சட்டத்தை விரைவில் அமல்படுத்தக்கோரி மக்கள் நீதி மய்யம் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில துணைச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவிருக்கும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

நாள் : 26.08.2022 இடம் : காந்தி பார்க், கோவை நேரம் : மாலை 6 மணி