புது தில்லி செப்டெம்பர் 13, 2022

ஆளும் மத்திய பிஜேபி அரசு பல வழிகளில் பல சர்ச்சைகளை உருவாக்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது அதனின் பல நடவடிக்கைகளில் தெரியவருகிறது. 2020 புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிவித்தது. இதனை தமிழகம் உட்பட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன.

மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்க முயற்சித்து வரும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தேசியக் அளவிலான பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக மத்திய அரசு சுமார் 23 மொழிகளைக் கொண்டு டிஜிட்டல் சர்வே நடத்துகிறது. அதில் பங்குபெறும் பொருட்டு ஓர் இணையதளம் மற்றும் மொபைலில் செயல்படும் வகையில் செயலியையும் அறிமுகம் செய்துள்ளது தேசிய கல்வி ஆணையம். இதில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் பள்ளித் தலைவர்கள் பல்துறை வல்லுனர்கள் கலைஞர்கள் கைவினைஞர்கள் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலரையும் அழைப்பு விடுத்துள்ளது.

அழகான, துடிப்பான ஆற்றல்மிகு பாடத்திட்டத்தை உருவாக்கவும் கல்வியின் தரத்தை உயர்த்தவும் இந்த சர்வே உபயோகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர்.

இந்த சர்வேயில் 1ஆம் வகுப்பில் பயிலும் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டிய மொழிகள் அவர்களின் முழுமையான வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் படிக்கவேண்டிய பாடங்கள் குறித்தெல்லாம் 10 கேள்விகள் உள்ளன அவற்றுக்கான பதில்களையும் கொடுத்து அதில் விரும்பியதை தேர்தெடுக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் எந்தெந்த மொழிகளைக் கற்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று 1 கேள்வி உள்ளது அதற்கு, தாய்மொழி, உள்நாட்டு மொழி, மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி என பல்வேறு பதில்கள் தரப்பட்டுள்ளன இதில்,

“சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகள் (1 ஆம்வகுப்பு முதல்)” என்றும் ஒரு பதில் தரப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர்த்து வேறு எந்த மொழியின் பெயருமே இதில் குறிப்பிடாத சூழலில், சமஸ்கிருதத்தை மட்டும் இதில் வலிந்து திணித்துள்ளனர்.

மக்களிடம் அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒரு மொழிக்கு ஏற்கனவே மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது (தேசிய கல்விக்கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டபோதும், சமஸ்கிருதத்திற்கு அதில் தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது) உலகெங்கிலும் பரந்துபட்ட மொழியாக அந்நிய நாட்டு மக்களாலும் விரும்பி கற்க்கப்படுகிற மொழியாகவும் இருக்கும் செம்மொழியான தமிழ்மொழிக்கு மிகவும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகையில் எந்த வகையிலும் அதிக புழக்கத்தில் இல்லாத அனைவராலும் பேசப்படுவதாக இல்லாமலும் இருக்கும் மொழிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுவது தமிழை வஞ்சிக்கும் செயல் தானே தவிர வேறு எதுவுமில்லை. இவர்களின் கொள்கைக்கு எதிரான மனநிலையில் பெரும்பாலும் மக்களின் எண்ணங்கள் உள்ளதாக பிஜேபி அரசு கருதுவதாகவே நமக்கு தோன்றுகிறது.

இந்நிலையில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான டிஜிட்டல் சர்வேயிலும் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிப்பது மத்திய அரசின் ஓரவஞ்சனையை காட்டுகிறது. இந்தியாவில் தமிழ் உட்பட பல மொழிகளும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் “சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகள்” என்று குறிப்பிடுவது யதார்த்தமாக நடந்த ஒன்றாக கருத முடியாது மாறாக சமஸ்கிருதத்தை வழிய திணிக்கும் முயற்சியே இது.

https://www.dailythanthi.com/News/State/in-national-curriculum-digital-survey-sanskrit-is-strongly-condemned-peoples-justice-center-792030