கோவை செப்டம்பர் 17, 2022
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் இரண்டு நாட்களுக்கு நடந்த பல நிகழ்வுகளுக்கு தலைமையேற்று நடத்தி வைத்தார்.
கெம்பட்டி காலனி துணி வணிகர்கள் அரசு பெண்கள் மேனிலை பள்ளி மாணவியரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். கல்வியின் அவசியம் எனக்கு நிறையவே தெரியும். வாழ்க்கையில் கல்வி எந்த இன்னலையும் களைய வைக்கும். பிறருக்கு உதவும் உத்வேகமும் அதற்கான பொருளாதார நிலை உயரக் காரணமாக இருக்கும். அதிலும் பெண்கள் கல்வி கற்று தேர்ச்சி அடைவது அடுத்த தலைமுறைகளுக்கும் சேர்த்து முன்னேறுவதற்கான ஒரு முன்னெடுப்பாகும். கல்வி என்பது அறியாமையை போக்குவதோடு இல்லாமல் தமது அறிவையும் மேம்படுத்திக் கொள்ள உதவுவது ஆகும்.
பெண்கள் கல்வி கற்பது தன்னம்பிக்கையுடன் தம் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகும். கல்வி கற்றதினால் சாதித்த பெண்கள் ஏராளம். நமது தேசியக் கவியான தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞரான புரட்சியாளன் பாரதியார் விருப்பம் அதுவே.
கல்வி கற்கும் இடமும் அதனைச் சுற்றியுள்ள சூழலும் அமைதியாகவும் தூய்மையாகவும் இருப்பது அவசியம். நாம் உயிர் வாழ தண்ணீர் எவ்வளவு முக்கியமானதோ அதேசமயம் நாம் அருந்தும் குடிநீர் தூய்மையானதாக இருப்பது மிகவும் அவசியம். அதனை உணர்ந்த எங்கள் மக்கள் நீதி மய்யம் காற்றில் இருந்து சுத்தமான குடிநீரை தயாரித்து தருவிக்கும் கருவி ஒன்றை இந்த அரசு பள்ளிக்கு மிக மகிழ்வுடன் நிறுவச் செய்தோம். தொழில்நுட்பங்களை நாம் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள கல்வி முழு முதல் அவசியம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மேற்கூறிய ஆர்ஓ கருவியை இயக்கி வைத்து தம்மை வரவேற்று மாணவியர்களுடன் கலந்துரையாடல் செய்ய ஏற்பாடு செய்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவியர்களுக்கும் நன்றியை கூறினார்.
கடந்த ஜனவரி 2022 இல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் போதைப்பொருள் உபயோகம் செய்யக் கூடாது என பத்திரிக்கையாளர்களிடையே உரையாற்றினார்.
https://www.hindutamil.in/news/tamilnadu/810042-kamalhaasan-says-should-be-carefull-in-drugs.html