கோவை தெற்கு செப்டெம்பர் 17, 2022

“எனக்கு வாக்களித்து வெற்றியை நோக்கி நகர்த்தியது நீங்கள் !! அதைத் தடுத்தது யார் என்பதையும் அறிவீர்கள் நீங்கள்!!” – சட்டமன்றத் தேர்தல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் பேசியபோது மக்கள் ஆரவாரம் !

அங்கு வந்திருந்த ஒரு தம்பதியரின் குழந்தைக்கு “விக்ரம் ராஜசேகர்’ என்று பெயர் சூட்டிய தலைவர், அடுத்த தலைமுறையைக் காத்திட போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்திட வேண்டும் என்று தலைவர் வலியுறுத்தினார். ..கோவை கெம்பட்டி காலனியில் !

போதுமான கழிவறைகள் வசதியில்லாமல் இருக்கும் அப்பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு கழிவறைகள் கட்டித்தரப்படும் என்றும் வாக்குறுதியளித்தார், அதனை சுத்தமாக பரமரிக்கும்படியும் கேட்டுக் கொண்டதோடு நில்லாமல் அப்படி உங்களால் பராமரிக்கப்படாமல் போனால் அதைக் கேள்வியுற்றால் நானே இங்கு வந்து அதைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்றார்.

கோவை ராஜவீதியில் அமைந்துள்ள கெம்பட்டி காலனி துணி வணிகர்கள் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு காற்றிலிருந்து தண்ணீர் தருவிக்கும் கருவியை மக்கள் நீதி மய்யம் சார்பாக நன்கொடையாக அளித்து மாணவிகளிடையே உரையாற்றியபோது.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை, இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் தலைவர் பள்ளி வளாகத்தில் காற்றிலிருந்து தண்ணீரைத் தருவிக்கும் கருவி !