விருதுநகர் – செப்டெம்பர் 24, 2022

மக்கள் நீதி மய்யம் மாவட்டம் தோறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக விருதுநகர், திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள், இணை & துணைச் செயலாளர்கள் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலையில் மாவட்டங்களின் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கட்டமைப்பு மற்றும் இதர அணிகளின் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது. மேலும் உள்ளூர்ப் பிரச்சினைகள் அவை நீண்ட கால கோரிக்கைகள், நிறைவேற்றபடாத கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள், முன்னெடுக்க வேண்டிய களப் போராட்டங்கள், தொகுதி வளர்ச்சித் திட்டங்கள், வவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது மற்றும் சேவை பெரும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என பல ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது.

திரு சிவா இளங்கோ, திரு ஜெய் கணேஷ், திரு PS ராஜன் மற்றும் சரவணன், செல்வகுமார் ஆகியோருடன் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.