சென்னை – செப்டெம்பர் 13, 2022

மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா ! – வெறும் ஏட்டளவில் இருந்ததை செயல் வடிவில் சிறந்து விளங்கும்படி மகளிர் பலரும் பல துறைகளில் கோலோச்சி வருகிறார்கள்.

வீட்டை நிர்வகிப்பது முதல் நாட்டை நிர்வகிப்பது, அரசியலில், விண்வெளியில், நிறுவனங்களை திறம்பட நடத்துவதில், ஆசிரியர், மருத்துவம், செவிலியர், விமானிகள், இராணுவம், விஞ்ஞானம், சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் இயக்குவது, இரயில் எஞ்சின் ஓட்டுனர் என பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் கல்வி கற்றலில் பின்தங்கி இருந்த நிலைகள் களையப்பட்டு மேற்சொன்ன துறைகளில் ஆளுமைகளை செலுத்தி வருகிறார்கள். மகளிரின் அருமை பெருமைகளை இன்னும் பட்டியலிட்டு சொல்லிக்கொண்டே போகலாம் எல்லாவற்றுக்கும் சிகரமாய் தாய்மையில் உன்னதத்தை தரவல்லது பெண் சக்தி. அத்தகைய பெண் ஆளுமைகளை நாம் கௌரவிப்பது நமக்கு பெருமை தரக்கூடிய ஒன்று. மற்ற கட்சிகளில் இல்லாத சிறப்பு நமது மக்கள் நீதி மய்யத்தில் உள்ளது அது மகளிர் மேம்பாடு அணி. எந்த தயக்கமும் இல்லை எந்த அச்சமும் இல்லை அரசியல் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்கான பணிகளில் சேவைகள் பல செய்துவரும் மாதர் படை. தோள் கொடுக்கும் உற்ற தோழியாய் கட்சி துவக்கியது முதலே சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் அணியை கௌரவம் செய்வது வரவேற்கத்தக்கது. தங்கள் துறைகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளை தேர்வு செய்து அவர்களுக்கு மய்யம் மகளிர் விருதுகளை அளிக்க அதற்கான ஏற்பாடுகளை செய்த மய்யம் வரும் செப்டெம்பர் 17 ஆம் தேதியன்று கோவையில் நடத்தவிருக்கிறது. உறவுகள் அனைவரும் அவர்தம் குடும்பத்தினருடன் இவ்விழாவிற்கு வந்திருந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வாருங்கள் சிறந்து பன்முகத் திறமையுடன் சிறந்து விளங்கும் மகளிரை போற்றுவோம் !

https://twitter.com/MNMsolinganalur/status/1570088054949552128?t=kkE4UKYcACZAFtpKfh3FOg&s=19