ஶ்ரீபெரும்புதூர் – செப்டம்பர் 13, 2022

எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாது போனாலும் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் வெறும் கைகளாலே கூட சுத்தம் செய்து தரும் தூய்மை பணியாளர்களின் அரசு நிர்ணயம் செய்த மாதாந்திர ஊதியத்தில் கால் பங்கிற்கு மேல் எடுத்துக்கொண்டு இதை வைத்துக்கொள் விருப்பமனில் பணி செய் இல்லையேல் விலகி ஓடு எனும் தொணியில் ஸ்ரீபெரும்புதூர் ஒப்பந்தராதாரர் ஒருவர் ஏதுமற்ற ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார். மாதாந்திர ஊதியமாக அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 12,720 தராமல் அதில் 8000 மட்டும் தரும் அந்த ஒப்பந்ததாரரை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி மீறி கேட்டால் எனில் நான் பெரிய இடத்தின் சிபாரிசை உடையவன் என்னை என்றும் அசைத்துக் கொள்ள முடியாது என்கிற தொணியில் அடாவடியாக பேசுபவர் அவர். காரணம் யாதெனில் தஞ்சாவூரைச் சேர்ந்த டெல்டா மாவட்டத்தின் அமைச்சர் ஒருவரின் சிபாரிசான அந்த ஒப்பந்ததாரர் வைத்தது தான் சட்டம். எந்தவித பாதுகாப்பும் இன்றி கிடைத்த பொருட்களைக் கொண்டு சாலை எங்கும் வீதி எங்கும் கழிவுகளை சுத்தம் செய்தபடி இருக்கும் ஒப்பந்தப் பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதில் பல முறைகேடுகளை தொடர்ந்து செய்து வருகிறார். இவற்றுக்கு என்னதான் விடிவு ஐந்துக்கும் பத்துக்கும் கடினமாக உழைப்பினை தந்து நிர்ணயிக்கப்பட்ட அளவிலும் கூட சம்பளம் வராமல் இருக்கும்போது அவர்களால் என்ன செய்து விட முடியும் என்கிற ஏளனமும் அலட்சியமும் ஒரு சேர ஆட்சியாளர் கைகளில் உள்ளது போல் தெரிகிறது.

அண்டிப் பிழைப்பவர்களிடம் சுரண்டிப் பிழைத்தல் முறையோ ?

இப்படி ஒரு முறை கேடு நடக்கிறது என்பதை கண்டு கொண்ட மக்கள் நீதி மய்யம் மாநில இணைச் செயலாளர் திரு தினேஷ் பாஸ்கர் (ஊடகம் & தகவல் தொழில் நுட்பம்) அவர்களின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போறாங்க விடியல் அரசின் ஆட்சியாளர்கள் ?

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த மாத ஊதியமான ரூ.12720 வழங்கப்படுவதற்குப் பதிலாக ரூ.8000 மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

கடந்த பலமாதங்களாகவே நிர்ணயித்த தொகை வழங்கப்படவில்லை. குப்பை அகற்றி மக்களின் சுகாதாரத்தைக் காக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதை நகராட்சி நிர்வாகத்துறை உறுதிசெய்திட வேண்டும்.

குறைவான ஊதியம் கொடுத்து அரசின் விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறிய ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். – மக்கள் நீதி மய்யம் கேள்வியும் கண்டனமும்.