திருவாரூர் – செப்டெம்பர் 14, 2022

இங்கே பணி செய்து பொருளீட்ட வாய்ப்புகள் இருப்பினும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு போதுமான அளவிற்கு வருமானம் தேடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் உயிருக்கு தற்போதெல்லாம் உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்படுகிறது. பணிச்சுமை, போதிய உணவு, தங்கும் வசதிகள் இல்லாமல், மொழி பாகுபாடு போன்ற காரணங்களினால் மிகுந்த சிரமங்களுக்கிடையில் வேலை செய்யும் பலர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலையும் செய்து கொண்ட தகவல்கள் உண்டு. அவை போதாது என்று வேலை தரும் நிறுவனங்கள் மற்றும் தனி முதலாளிகள் செய்யும் அடாத (சிலரே இது போன்ற விடையங்களில் ஈடுபடுகிறார்கள், நற்பெயரை மற்றும் நியாயமான பணிகளையும் அதற்கான போதுமான ஊதியங்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர் முதலாளிகளும் உண்டு) செயல்களினால் தங்கள் உயிரை இழக்கும் அபாயங்களும் உள்ளதால் அயல்நாடுகளுக்கு கூலி வேலை செய்ய செல்லும் பணியாட்களின் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை நாம் அறியலாம்.

அப்படி ஒரு துயரச்சம்பவம் திருவாரூர் மாவட்டம் லட்சுமங்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவருக்கு குவைத் நாட்டில் ஏற்பட்டு உயிரை இழந்துவிட்ட சோகம் அரங்கேறியுள்ளது.

மனைவி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த முத்துக்குமரன் தமது குடும்பச்சூழல் காரணமாக குவைத் நாட்டிற்கு துப்புரவு பணியாளராக பணிக்கு சேர்ந்த முதல் நாளன்றே செய்யும் பணி மிகக் கடுமையாக இருப்பதாக தம் குடும்பத்தாரிடமும் மற்றும் தன்னை அனுப்பி வைத்த ஏஜென்ட் மோகனாவிடமும் சொல்லி அழுதுவிட்டு தன்னை உடனடியாக இந்தியாவிற்கு திரும்ப அழைத்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார் அதற்கு அந்த ஏஜென்ட் எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது சொல்லி இருக்கிறார். பணிக்கு சேர்ந்த இடத்தில துப்புரவு பணியை விடுத்து ஒட்டகம் மேய்க்கச் சொன்னதாகவும் அதற்கு மறுத்துவிட்டதால் நான்காவது நாளே சுடப்பட்டு உயிரை இழந்துள்ளார். பணிக்கு இடையில் ஒரு நாள் தந்து நண்பரிடம் இங்குள்ள நிலையை சொல்லி பேசிகொண்டிருக்கையில் திடீரென துண்டிக்கப்பட்ட போன் அழைப்பு காரணமாக சந்தேகம் அடைந்த அந்த நண்பர் தொடர்ந்து முயற்சித்தும் பலன் இல்லாமல் போனது. அந்த நேரத்தில் குவைத் முதலாளிகள் முத்துக்குமாரை கடுமையாக தாக்கியதும் இல்லாமல் துப்பாக்கியால் சுட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில் குவைத் நாட்டில் இந்தியர் ஒருவர் சுடப்பட்டு இறந்ததாக ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாக பின்னர் 9 ஆம் தேதியன்று முத்துகுமாரின் மனைவி வித்யாவிற்கு அவரது கணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விபரம் தெரிவிக்கப்படுகிறது. முத்துகுமாரின் கூக்குரலை அந்த ஏஜென்ட் செவிமடுத்து அவரை மீட்க செயல்பட்டு இருந்தால் இந்தக் கொலை நிகழாமல் அவர் காக்கப்பட்டு இருக்கலாம்.

இந்த விபரங்களை அறிந்த அவரின் மனைவி மற்றும் உறவினர் நண்பர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இறந்த முத்துகுமாரின் சடலத்தை பெற்றுத் தருமாறும் கோரிக்கை வைத்தும் மேலும் கிராம பொதுமக்கள் சுமார் 500 பேர் பேரணி ஒன்றையும் ஆட்சியர் அலுவலகம் வரை நடத்தினர் .

இதன் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பணி செய்ய சென்ற இடத்தில் முன்னுக்குப் பின் முரணான பணிகளில் ஈடுபடுத்தியும் மட்டுமில்லாமல் ஓர் உயிரையும் துச்சமாய் நினைத்து சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தகுந்த நடவடிக்கையும் குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தகுந்த இழப்பீடு பெற்றுத் தருவதோடு நில்லாமல் அவரது உடலை இந்தியாவிற்கு வரவழைக்க வேண்டிய பணிகளையும் விரைந்து முடிக்கும் படி தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Courtesy : Thanthi TV

https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/petition-recovery-body-muthukumar-who-has-passed-away-kuwait

https://tamil.oneindia.com/news/thiruvarur/what-happened-to-muthukumaran-who-killed-in-kuwait-475515.html

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruvarur-man-who-went-work-kuwait-was-passed-away-four-days

https://www.dailythanthi.com/News/State/action-is-necessary-to-recover-muthukumarans-body-who-was-shot-dead-in-kuwait-mnm-insists-792147