கோவை : அக்டோபர் 10.10.2022
என்றும் பிறர் மீது அன்பை சொல்வார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அனைவரும் மக்களின் மீது அன்பை மட்டுமல்ல நான் மதிப்பும் கொண்டிருக்கிறார்கள்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் 50 சதவீதம் மட்டுமே ஊதியமாகத் தரும் ஒப்பந்ததாரரை கண்டித்தும் தூய்மை பணியின் போது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் தராமல் இருப்பதும் குறித்து கடந்த வாரத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது கோரிக்கைகளை மனுவாகவும் மாவட்ட ஆட்சியரிடமும் கோவை மேயர் அவர்களிடமும் அணியினராக திரண்டு சமர்ப்பித்தனர். வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மாவட்ட நிர்வாகிகள் பங்கு பெற்று தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் படி வலியுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் அவர்களின் முன்னிலையில் பெயரில் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கூடி கலந்தாலோசித்தனர். மேலும் அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து தகுந்த முறையில் தீர்வு காணப்படும் என ஒப்புதல் அளித்தனர்.
அப்போது நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாறு கேட்டுக்கொண்ட மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமான தொழிற்சங்கமான நம்மவர் தொழிற்சங்க பேரவையில் மேற்கண்ட தூய்மை பணியாளர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தூய்மைப் பணியாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடன் இணைந்து கோரிக்கைகளை முன்வைத்து அவைகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தூய்மைப் பணியாளர்கள் அமைப்பிற்கு
தொழிற்சங்க பேரவையில் இணைந்த தூய்மை பணியாளர்களுக்கு நல் வரவேற்பை நல்கியும் மரியாதை செய்யப்பட்டது. நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மூலமாக இனிவரும் நிகழ்வுகள் அனைத்திலும் மக்கள் நீதி மய்யமும் தூய்மை பணியாளர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி உடன் நிற்கும்.