திருப்பூர் : அக்டோபர் 10.10.22

நம்மவர் தொழிற்சங்க பேரவை 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு துவக்க விழா சிறப்புற நடைபெற்று முடிந்தது.

மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு துவக்க விழா 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது.

காலை முதல் அமர்வாக தொழிலாளர்களின் நலன் காத்திட திருப்பூர் ஸ்ரீகுமரன் மருத்துவமனை, லோட்டஸ் கண் மருத்துவமனை, சிட்டி ஸ்மைல் பல் மருத்துவமனையோடு இணைந்து மாபெரும் சிறப்பு பொது மருத்துவ முகாமும், சிறப்பு இரத்ததான முகாமும் நடைபெற்றது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், திருப்பூர் பகுதிவாழ் மக்கள் கலந்து கொண்டு பயனைடைந்தனர். அத்துடன் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் தொடங்கி திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 9இடங்களில் தொழிற்சங்க கொடியும், மய்யக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து மாலையில் இரண்டாவது அமர்வாக நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு துவக்க விழா தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து செல்வி. ஆர்.அபிராமி அவர்களின் பரத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியோடும், பேரவை துணைத் தலைவர் ஆர்.சொக்கர் அவர்களின் வரவேற்புரையோடு தொடங்கியது

பேரவையின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையிலும், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர்கள் திரு. ஏ.ஜி.மெளரியா ஐபிஎஸ் ஓய்வு, ஆர்.தங்கவேலு, திருப்பூர் வடகிழக்கு மாவட்டச் செயலாளர் க.கமல். கே.ஜீவா ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் பொதுச் செயலாளர் திரு. வி.ரவிச்சந்திரன் அவர்கள் தொழிற்சங்க பேரவையின் ஓராண்டு செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசிக்க, பேரவையின் பொருளாளர் திருமதி. மா.பானுமதி அவர்கள் 2021ம் ஆண்டு டிசம்பர் வரைக்குமான தணிக்கை செய்யப்பட்ட பேரவையின் வரவு செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பேரவை விதி எண். 10ன் அடிப்படையில் பேரவை தலைவராக சு.ஆ.பொன்னுசாமி, பொதுச் செயலாளராக வி.ரவிச்சந்திரன் ஆகியோர் 2026ம் ஆண்டு வரை தொடர்வார்கள் என்பதால் பேரவையின் விதி எண் 10இ-ன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான நிர்வாகிகளாக கீழ்க்காணும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

பொருளாளராக மீண்டும் திருமதி. பானுமதி

துணைத் தலைவர்களாக மீண்டும் திரு. கே.மாடசாமி, திரு. ஆர்.சொக்கர், திரு. பி.குணசேகரன், திரு. எம்.கே.ராஜன், திரு. ஏ.மெல்கியோ, திரு. கோ.ரவிச்சந்திரன் மற்றும் புதிய துணைத் தலைவராக திரு. ச.சரவணகுமார் ஆகியோரும்,

மீண்டும் துணைச் செயலாளர்களாக திரு. LIC. எஸ்.சுரேஷ், திரு. எம்.விஜயகுமார், மற்றும் புதிய துணைச் செயலாளர்களாக திருமதி. ரோஸ்லின் மேரி, திருமதி. சாந்தி சுப்பிரமணியம் ஆகியோரும், செயற்குழு உறுப்பினராக மீண்டும் திரு. எம்.ஆனந்த் அவர்களும், மதுரை மண்டல செயலாளராக மீண்டும் திரு. பி.எஸ்.சரவணன் அவர்களும், சென்னை மண்டல செயலாளராக புதியதாக திரு. எல்.விஜயன் அவர்களும் நியமனம் செய்யப்பட்டு பொதுக்குழுவில் 7உறுதிமொழிகளை ஏற்று உடனடியாக தங்களின் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கொள்கை பரப்பு மாநிலச் செயலாளர் டாக்டர். அனுஷா ரவி, பேரவையின் பொருளாளர் திருமதி. மா.பானுமதி, கோவை தொழிலாளர் நல அணி மண்டல அமைப்பாளர் திருமதி. ஏ.சாகிதா பாபு, ஊடகம் &செய்தி தொடர்பு மண்டல அமைப்பாளர் திருமதி. ரம்யா வேணூகோபால், திருப்பூர் வடகிழக்கு மாவட்ட மகளிர் & குழந்தைகள் நல அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. கஸ்தூரி, பனியன் தொழிற்சங்க தலைவர் திருமதி. சாந்தி சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி வைக்க 3ம் ஆண்டு துவக்க விழா இனிதே துவங்கி நடைபெற்றது.

இவ்விழாவில் ஊடகம் & செய்தி தொடர்பு மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ், நற்பணி இயக்க அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜி.நாகராஜன், ஊடகம் & செய்தி தொடர்பு மாநில செயலாளர் திரு. வினோத், பயிற்சி & திறன்மேம்பாடு மாநில செயலாளர் திரு. சஜிஷ், தலைமை நிலைய மாநில துணைச் செயலாளர்கள் திரு. பி.சண்முகராஜன், திரு. பி.கபிலரசன், நற்பணி இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. எம்.பி.செல்லப்பாண்டி, திரு. எஸ்.வி.மகாதேவன், கோவை மண்டலத்திற்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு. செல்வதங்கம், நற்பணி இயக்க அமைப்பாளர் திரு. ஐ.சித்திக், விவசாய அணி அமைப்பாளர் திரு. சி.ஸ்ரீதர், தொழிலாளர் நல அணி சேலம் மண்டல அமைப்பாளர் திரு. கே.சிவக்குமார், மகளிர் தொழிற்சங்க தலைவர் திருமதி. E.சங்கீதா, பொதுச் செயலாளர் திருமதி. A.தனலட்சுமி, பனியன் தொழிற்சங்கத்தின் தலைவர் திரு. பழனிக்குமார், பொருளாளர் திரு. துரை காந்திராமன், தொழிலாளர் நல அணியின் கோவை தெற்கு மாவட்ட அமைப்பாளர் திரு. ஏ.வெங்கட்ராஜ், கோவை வடகிழக்கு மாவட்ட அமைப்பாளர் திரு. ரகுபதி பரமன், ஈரோடு தென்கிழக்கு மாவட்ட அமைப்பாளர் திரு. மயில்வாகனன் உள்ளிட்ட மய்யத்தின் நிர்வாகிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இணைப்பு :- நிகழ்ச்சி புகைப்படம் மற்றும் 13துறை சார்ந்த பொதுக்குழு தீர்மானங்கள்.