சென்னை – அக்டோபர் 04, 2022

மக்கள் நீதி மய்யம் கட்சியின் – நம்மவர் தொழிற்சங்க பேரவையின் ஆங்கீகாரம் பெற்ற முதல் ஆட்டோ நிறுத்தம் சென்னை அடையாரில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் திறந்து வைக்கப்பட்டது.

விழாவின் சிறப்பு அழைப்பளர்களான இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன், தலைமை நிலைய மாநில செயலாளர் திரு S.B. அர்ஜுன் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆன திருமதி சினேகா மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் திரு சு. பொன்னுசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. தொழிற்சங்கப் பேரவையின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். NTSP யின் முதல் ஆட்டோ ஓட்டுனர் நிறுத்தம் திறந்து வைக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையுடன் இணைக்கப்பட்ட நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் மாநிலத்தின் முதல் ஆட்டோ நிறுத்தம், பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பேரவை கொடியேற்றம் 04.10.2022 காலை 11.30 மணியளவில் சென்னை அடையார், கஸ்தூரிபாய் நகரில் நடைபெற்றது. பெயர்ப்பலகையும், தொழிற்சங்கத்தின் கொடியேற்றமும் இனிதே நடைபெற்றது.