சென்னை – அக்டோபர் 01, 2022

தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத் ராஜ் எனும் திட்டத்தின் மூலமாக அறிமுகமானது கிராம சபை எனும் கிராம ஊராட்சியின் பொதுக்குழு என்றும் குறிப்பிடலாம்.

கிராம சபையின் அதிகாரம் என்பது சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் சற்றேரக்குறையாக இருக்கக்கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்தது

கிராம சபையின் சிறப்பினை உணர்ந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் ஒவ்வொரு மேடைகளிலும் தவறாமல் எடுத்துரைத்தார். அதோடு நின்றுவிடாமல் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று செயல்படாமல் இருந்த கிராம சபையை வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் நடத்தப்பட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டது.

2018 மே மாதம் 1 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் எனும் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் பொதுமக்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதன் பிறகு நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பலரும் அவரவர் பகுதிகளில் கலந்து கொண்டனர்.

அது போன்று நடப்பாண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி நாடு முழுவதும் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படவிருக்கிறது. எனவே தமிழகமெங்கும் நடைபெறவிருக்கும் கிராம சபையில் தலைவரின் ஆணைக்கிணங்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் என தயாராகி வருகிறாகள். பொதுமக்களுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன மற்றும் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்கள் பற்றியும் வரவு செலவு கணக்குகள் பற்றியும் ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் விவாதங்கள் நடத்திட ஆயுத்தமாகி வருகிறார்கள்.

கட்சியின் துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க விருக்கும் கிராம சபை சிறக்க மய்யத்தமிழர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

கிராமியமே தேசியமென்றால் நாளை நமதே – திரு. கமல் ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://t.co/YJbi6NGDgM

வருக மக்களே வருக தர மறுத்தால் உங்கள் உரிமையாய் கேட்டுப் பெறுக ! – அதற்கென உங்களுடன் கரம் கோர்த்து துணை நிற்கும் மக்கள் நீதி மய்யம்

கிராம சபை எப்படி நடக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் நமது மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் நடத்திய மாதிரி கிராம சபை பற்றிய காணொளியை காண்க.