காஞ்சிபுரம் அக்டோபர் 11, 2௦22

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் பகுதியில், புதிதாகத் திறக்கப்பட்ட சிப்காட் தொழிற்பூங்காவின் புதிய அலுவலகத்தில், ஒரே அறையில் 2 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளாகி வருகிறது.

ஏற்கெனவே, கோயம்புத்தூரில் ஒரே அறையில் இரு கழிப்பறைகள் அமைக்கப்பட்டது, வெவ்வேறு பகுதிகளில் ஆழ்குழாய் கிணற்றின் அடிபம்ப்பை அகற்றாமலேயே கான்கிரீட் தளம் அமைத்தது, இருசக்கர வாகனத்தின் டயர் சாலையில் புதையும்படி சிமென்ட் சாலை போட்டது போன்றவை தமிழக அரசை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கின.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, இனியும் இதுபோல நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, மக்களின் வரிப்பணம் என்பதை அதிகாரிகள் மறந்துவிடக்கூடாது.