திருப்பூர், அக்டோபர் 06, 2022

திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நெஞ்சைப் பதரச் செய்துள்ளது.

திருப்பூரில் கெட்டுப்போன உணவால் 3 குழந்தைகள் பரிதாப மரணம். ஆதரவற்றோர் காப்பகங்களை கண்காணிக்க மநீம வலியுறுத்தல். திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களில் வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது. – மக்கள் நீதி மய்யம்

https://www.dailythanthi.com/News/State/death-of-sheltered-children-in-tirupur-district-collector-vineeth-explained-808303