சென்னை – நவம்பர் 11, 2௦22
உணவும் நீரும் காற்றும் இல்லையெனில் இவ்வுலகம் இயங்காது என்பது உலக நியதி.
உலகில் விவசாயம் என்பது மிக முக்கியமானது அதனைச்சுற்றி இயங்கும் அரசியல் அதிலும் முக்கியமானது. அத்தகைய விவசாயம் பற்றிய புரிதல் கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதும் நகரங்களில் வாழ்வோருக்கு அவசியமற்ற ஒன்று என்றும் சொல்ல முடியாது சொல்லவும் கூடாது. விவசாயம் என்றைக்கும் இலாபமீட்டும் சராசரி வணிகமோ தொழிலோ அல்ல அது சேவை. இயற்கையின் கொடையான மண் மற்றும் மண் சார்ந்த இடமும் விவசாயத்திற்கு உகந்தது. இதில் விவசாயிகள் படும் இன்னல்கள் சொல்லி மாளாதது. 3௦௦ நாட்களுக்கு கடுமையான உழைப்பினை கொட்டி உடல்வலி உண்டாகி விளைச்சல்கள் விற்பனைக்கு சென்றால் மட்டுமே அவர்களுக்கு சற்றே நிம்மதி. மாறாக இயற்கைச் சீற்றங்கள் மூலம் உண்டாகும் இழப்புகள் அவர்களின் உழைப்பையும் முதலீட்டையும் சிதைத்து சின்னபின்னமாகி விடும் அபாயமும் உண்டு.
இதிலும் இயற்கையாக செய்யப்படும் விவசாயமும் இராசாயன உரங்கள் போன்றவற்றால் செய்யப்படும் விவசாயமும் வேறுபாடுகள் உடையது. இராசயனம் கொட்டி வரும் விவசாய விளைச்சல்கள் அதிக மகசூல்களை தந்தாலும் முரண்கள் அதிகம். ஆனால் இயற்க்கை விவசாயம் மண் கக்கும் மக்களின் நலன் ஆயுள் காக்கும் என்றால் மிகையாகாது.
மேலே சொன்னது போல் அரசியலில் விவசாயம் என்பது தவிர்க்க இயலாத ஓர் அங்கம், தமிழகம் மட்டுமல்ல தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கிளையாக விவசாய அணியை நிர்வகித்து வருகின்றன. அது போல் நேர்மையும் நியாமும் மக்களின் நலமும் முக்கியம் என கருதும் மக்கள் நீதி மய்யம் விவாசாய அணி எனும் ஓர் முக்கிய அங்கத்தை கொண்டுள்ளது. அதன் மாநில செயலாளராக டாக்டர் திரு. G. மயில்சாமி அவர்கள் பொறுப்பு வகித்து வருகிறார்.
நம் கட்சியினர் நாலும் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பது நம்மவர் தலைவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் விருப்பம். அதன் வழியே இன்று இயற்கை விவசாயம் பற்றி அறிவோம் என காணொளி கருத்தரங்கம் மூலம் தெளிவாகவும் அழகாகவும் விளக்கங்கள் அளிக்கிறார் நம் விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர் திரு.G.மயில்சாமி அவர்கள்