மதுரை – நவம்பர் 26, 2௦22

இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டி விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அதற்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 26 & 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் மதுரை (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்து திறன்பட செயல்பட்டு முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு பணி செய்தனர்.

ஒத்தக்கடை துவக்கப் பள்ளியில் ஒத்தக்கடை (நகர செயலாளர்) திரு பாபு ஹாசன் மற்றும் கேபிள் முருகன் அவர்களும், ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியில் (ஒன்றிய செயலாளர்) திரு. மலைக்கண்ணன் மற்றும் க. கதிரேசன் (ம.கி.மா.செ) உத்தங்குடி துவக்கப்பள்ளியில் (நகரச் செயலாளர்) திரு குமார் அவர்களும் மதுரை ஆனையூர் பள்ளியில் திருமதி சபிதா தேவி (நகர செயலாளர்) அவர்களும், ஆலங்குளம் சி இ ஓ ஏ பள்ளியில் (நகரச் செயலாளர்) திரு. பிரகாஷ் அவர்களும் மிளகரணை பகுதியில் (ஒன்றிய செயலாளர்) திரு கேபிள் கண்ணன் அவர்களும் முகாமில் பங்கெடுத்து புதிய வாக்காளர்களை இணைவதற்கு சிறப்பான பணியை மேற்கொண்டனர்.

மதுரை கிழக்கு தொகுதியில் மொத்தம் 46 புதிய வாக்காளர்களை இணைத்துள்ளோம் என மதுரை (கிழக்கு) மாவட்டச் செயலாளர் க கதிரேசன் அவர்கள் தெரிவித்தார்.